புதிய நாடாளுமன்றக் கட்டிடம், புது தில்லி
இந்திய நாடாளுமன்றத்தின் இருக்கை From Wikipedia, the free encyclopedia
இந்திய நாடாளுமன்றத்தின் இருக்கை From Wikipedia, the free encyclopedia
புது தில்லியில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடம் இந்திய நாடாளுமன்றத்தின் இருக்கையாகும். இது மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகியவற்றைக் கொண்டுள்ளது, அவை முறையே இந்தியாவின் ஈரவை நாடாளுமன்றத்தில் கீழ் மற்றும் மேல் சபைகளாகும்.
நாடாளுமன்றக் கட்டிடம் | |
---|---|
சன்சத் பவன் | |
பொதுவான தகவல்கள் | |
முகவரி | 118, ரஃபி மார்க், புது தில்லி, தில்லி |
நகரம் | புது தில்லி |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 28°37′02″N 77°12′36″E |
தற்போதைய குடியிருப்பாளர் | இந்திய நாடாளுமன்றம் |
அடிக்கல் நாட்டுதல் | 1 அக்டோபர் 2020 |
நிறைவுற்றது | 28 May 2023 |
திறக்கப்பட்டது | 19 செப்டம்பர் 2023 |
கட்டுவித்தவர் | மத்திய பொதுப்பணித்துறை |
உரிமையாளர் | இந்திய அரசு |
உயரம் | 39.6 மீட்டர் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 4[1] |
தரைகள் | 65,000 m2 (700,000 sq ft)[2] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பிமல் படேல் |
கட்டிடக்கலை நிறுவனம் | HCP வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரைவேட் லிமிடெட் |
முதன்மை ஒப்பந்தகாரர் | டாடா ப்ராஜெக்ட்ஸ் |
பிற தகவல்கள் | |
இருக்கை திறன் | 1,272 (மக்களவை அறை: 888 மாநிலங்களவை அறை: 384) |
பொது போக்குவரத்து அணுகல் | மத்திய செயலகம் |
வலைதளம் | |
sansad.in |
இந்தியாவின் மத்திய விசுடா மறுவளர்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, புது தில்லியில் ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது. இது 28 மே 2023 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்பட்டது.[3]
இது ரஃபி மார்க்கில் அமைந்துள்ளது, இது மத்திய விசுடாவைக் கடந்து பழைய நாடாளுமன்றக் கட்டிடம், விஜய் சௌக், இந்தியா வாயில், தேசிய போர் நினைவிடம், குடியரசுத் துணைத் தலைவர் இல்லம், ஐதராபாத்து இல்லம், செயலக கட்டிடம், பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லம், அமைச்சக கட்டிடங்கள் மற்றும் இந்திய அரசாங்கத்தின் மற்ற நிர்வாக அலகுகளால் சூழப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் முதன்முதலில் 19 செப்டம்பர் 2023 அன்று நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் போது,[4] இந்திய நாடாளுமன்றம் என்ற பெயருடன் அதிகாரப்பூர்வ அலுவல்களுக்காக பயன்படுத்தப்பட்டது.
2010களின் முற்பகுதியில் தற்போதைய பழைய நாடாளுமன்ற கட்டமைப்பின் நிலைத்தன்மை குறித்த கவலைகள் காரணமாக தற்போதுள்ள வளாகத்திற்குப் பதிலாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான முன்மொழிவுகள் வெளிப்பட்டன. தற்போதைய கட்டிடத்திற்குப் பல மாற்று வழிகளைப் பரிந்துரைப்பதற்கான ஒரு குழுவை அப்போதைய இந்திய மக்களவைத் தலைவர் மீரா குமார் 2012-ல் அமைத்தார். தற்போதைய கட்டிடம், 93 ஆண்டுகள் பழமையான கட்டிடம் என்பதாலும் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது பணியாளர்களுக்கு போதுமான இடவசதியின்மையால் பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. மேலும் கட்டமைப்பு சிக்கல்களால் பாதிக்கப்படுவதாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், இந்தக் கட்டிடம் இந்தியாவின் தேசிய பாரம்பரியமிக்க தாகக் கருதப்படுகிறது. எனவே இக்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கான திட்டங்களும் உள்ளன.[5]
இந்திய அரசாங்கம் 2019ஆம் ஆண்டில் மத்திய விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டத்தைத் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை நிர்மாணித்து, புது தில்லியில் ராஜ்பத்தை மறுசீரமைத்தல், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவருக்கு புதிய குடியிருப்பு கட்டுதல், புதிய அலுவலகம் மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட பிற திட்டங்களுடன், இந்தியப் பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்துடன் அனைத்து அமைச்சக கட்டிடங்களையும் ஒரே மத்திய செயலகத்தில் இணைத்தல் உள்ளது.[6][7]
புதிய பூமி பூசை அக்டோபர் 2020இல் நடைபெற்றது மற்றும் திசம்பர் 10, 2020 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.[8]
அடிக்கல் நாட்டு விழா நடைபெற அனுமதிக்கப்பட்ட போதிலும், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் மணிக்ராவ் கான்வில்கர், இத்திட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் பெறப்பட்ட மனுக்கள் தீர்க்கப்படும் வரை மத்திய விஸ்டா மறுமேம்பாட்டுத் திட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைத்தார்.[9] திசம்பர் 10 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோதி கட்டிடத்தின் அடிக்கல்லை நாட்டினார். இவ்விழாவில் அனைத்து சமயத் தலைவர்களால் மதங்களுக்கு இடையேயான பிரார்த்தனை நடைபெற்றது.[10][11] ஜனவரி 2021 இல், உச்சநீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பில், சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டு கட்டிடத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டன.[12]
மத்திய விசுடாவின் மறுவடிவமைப்புக்கு பொறுப்பான கட்டிடக் கலைஞர் பிமல் படேலின் கருத்துப்படி, புதிய வளாகம் முக்கோண வடிவில் இருக்கும். இது ஏற்கனவே உள்ள வளாகத்திற்கு அடுத்ததாகக் கட்டப்படும் மற்றும் முந்தியதை கட்டிடத்தினை விடச் சற்று (5%) சிறியதாக இருக்கும்.[13][14][15]
இந்தக் கட்டிடம் 150 ஆண்டுகளுக்கும் மேலான ஆயுட்காலம் கொண்டதாக இருக்கும்.[1] இது பூகம்ப பாதிப்பினை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் கட்டிடக்கலை பாணிகளை உள்ளடக்கியதாக இருக்கும்.[16] மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டங்களுக்காக தற்போது உள்ளதை விட அதிகமான உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில் அதிக இருக்கைகளைக் கொண்டிருக்கும். ஏனெனில் இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை மற்றும் அதன் விளைவாக வருங்கால எல்லை நிர்ணயம் ஆகியவற்றுடன் இந்திய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பினை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய வளாகத்தில் மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவை அறையில் 384 இடங்களும் இருக்கும். தற்போதைய நாடாளுமன்றக் கட்டிடம் போலல்லாமல், இது ஒரு மைய மண்டபத்தைக் கொண்டிருக்காது மற்றும் மக்களவை மண்டபத்தில் 1272 உறுப்பினர்கள் இருக்க முடியும். இதனால் இரு அவை இணைந்த கூட்டத்தினை நடத்திட முடியும்.[16] மீதமுள்ள கட்டிடத்தில் அமைச்சர்களின் அலுவலகங்கள் மற்றும் நிலைக்குழுக்களின் அறைகள் கொண்ட 4 தளங்கள் இருக்கும்.[1]
இக்கட்டிடம் 22.900 மீ 2 (விட்டம் 170,7 மீ) அளவுடையதாக இருக்கும். பழைய வட்ட கட்டிடத்தினை (21700 மீ) விட இது 1200 மீ 2 குறைவாக இருக்கும். இதன் திறந்த பகுதியில் ஆலமரம் ஒன்றிற்கான பரந்த 830 மீ 2 இடைவெளிப் பகுதி காணப்படும். 1.5 ஏக்கர் பரப்பளவானது இதன் திறந்தவெளி பகுதி உட்பட, ஒவ்வொரு அரை ஏக்கருக்கும் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.