From Wikipedia, the free encyclopedia
இசுகெச்சப் (Sketch Up)முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கும் கட்டிடக்கலை வல்லுனர்கள் மற்றும் குடிசார் பொறியியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விளையாட்டு மென்பொருட்தயாரிப்பாளர்கள் மற்றும் பல தொழில் சார் வல்லுனர்களால் பாவிக்கப்படும் மென்பொருளாகும். இம் மென்பொருளானது மிகவும் வெளிப்படையானதும் மகிழ்ச்சியூட்டுவதும் நெகிழ்ச்சியானதுமான மென்பொருளாகும். ஏனைய முப்பரிமாண மென்பொருட்களைப் போலல்லாது இது இலகுவான இடைமுகத்தாலேயே பெரிதும் விரும்பப்படுகின்றது.
கூகிள் ஸ்கெச்சப்பின் மாதிரிகளை உருவாக்கும் தன்மையையும் எளிதான பாவனையையும் எடுத்துக்காட்டும் ஓர் திரைக்காட்சி. | |
உருவாக்குனர் | கூகிள் (முன்னர் @லாஸ்ட் சாப்ட்வேர்) |
---|---|
அண்மை வெளியீடு | 6.0.1099 (வின்) / 6.0.1099 (மாக் ஓஸ்) / செப்டம்பர் 14 2007 |
இயக்கு முறைமை | MS Windows 2000/XP/Vista, Apple Mac OS X (10.4) (Universal Binary) |
மென்பொருள் வகைமை | 3D computer graphics |
உரிமம் | Proprietary |
இணையத்தளம் | www.sketchup.com |
இதிலுள்ள முக்கியமான அம்சங்கள்
ஸ்கெச்சப் ஸ்ராட்டப் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்டது. இம்மென்பொருளின் வெற்றியானது ஏனைய மென்பொருட்களைப் போலல்லாமல் இலகுவாகக் கற்கக் கூடியதாக இருந்ததால் இதைப் படிப்பதற்கான நேரத்தைக் குறைத்து கூடுதலான நேரத்தை வரைபடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிந்தது.
ஸ்கெச்சப் இணையத்தளத்தில் இருந்து நீட்சிகளைப் பதிவிறக்கம் செய்யமுடியும்
ஸ்கெச்சப்பின் குறிப்பிடத்தக்க நீட்சியானது முப்பரிமாண உருக்களை .kmz கோப்புக்களாக ஏற்றுமதி செய்யவியலும். இது பின்னர் கூகிள் ஏர்த் மென்பொருளில் திறக்கப் படக்கூடியது. எனவே உலகின் எப்பாகத்தில் கட்டிடம் அமையப் போகின்றது அதன் நிலத்தோற்றம் பற்றிய விபரங்களைச் சேகரிக்கவியலும்.
வேறு நீட்சிகள் கோப்புக்களை 3D ஸ்ரூடியோ (3D Studio) போன்ற மென்பொருடகளில் பாவிக்கக் கூடிய கோப்புக்களாக ஏற்றுமதிசெய்யவியலும்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.