மனிதன் இறப்பிற்குப் பின்பு அவனுடைய உடலிலிருந்து பிரிந்து செல்லும் ஆவி ( உயிர் )(ⓘ), ஆவியுலகம் என்கிற தனிப்பட்ட உலகில் வாழ்கிறது என்கிற நம்பிக்கை சிலரிடம் இருக்கிறது. மனிதன் இறப்பிற்குப் பின்பு அவன் உயிருடன் இருக்கும் போது செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப சொர்க்கம், நரகம் போன்றவை கிடைக்கிறது. சொர்க்கம், நரகம் போன்றவற்றில் கிடைக்கும் சுகம் மற்றும் தண்டனைகளை ஆவியுடல் ஏற்றுக் கொள்கிறது. ஆயுட்காலம் முடியாமல் தற்கொலை, விபத்துக்கள் போன்று இடையில் மரணமடைந்தவர்களின் ஆவிகள் பேய், பிசாசுகளாக உலவுகின்றன என்கிற நம்பிக்கையும் இதிலிருக்கின்றன. அதாவது ஆவி என்பது ஒருவர் இறந்த பின்பு அவரின் எதோ ஒரு வகை எச்சம் இருந்து அவர் வசித்த இடங்களில் அலைந்து கொண்டிப்பதான ஒரு வகை நம்பிக்கை. இறப்புக்காலம் வருவதற்கு முன்பாகவே மரணமடைந்தவர்கள் அவர்கள் இறப்புக் காலம் வரும் வரை பேயாக அலைந்து கொண்டிருப்பார்கள் என்கிற நம்பிக்கை இந்தியாவில் பெரும்பான்மையானவர்களிடம் இருந்து வருகிறது. இது ஒரு மூட நம்பிக்கை என்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களிடையே இது அதிக அளவில் இருக்கிறது.[1][2][3]
ஆவியின் உருவம்
ஆவி குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ள நூல்களில் அல்லது செய்திகளில் பொதுவாகக் கால்கள் அற்று, கட்டான உடம்பு அற்று அசையும் வெள்ளை மனித வடிவத் துணி போன்றது என்று ஆவி (பேய்) உருவம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
கற்பனை உருவாக்கம்
இதுவரை ஆவி உள்ளதென எந்த ஒரு தகுந்த முறையிலும் நிரூபிக்கப்படவில்லை. இது மனிதனின் ஒரு கற்பனை உருவாக்கம் எனலாம்.
விஞ்ஞானம் விளக்க முயற்சிகள்
இங்கிலாந்து நாட்டு மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய், பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப் பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட்டது என்றும் கூறினார்கள்.
பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ, பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.
கொள்ளிவாயுப் பேய்
சதுப்பு நிறைந்த வயல் நிலங்களில் நடக்கும் ஒருவரை இது நெருப்பாகப் பின்தொடரும் எனவும் ஓட முற்பட்டால் இதுவும் ஓடும் எனவும் கூறப்படுகிறது. அறிவியல் ரீதியில் அணுகுபவர்கள் இதைச் சதுப்பு நிலத்தின் கீழ் அழுகும் தாவரப் பாகங்களிலிருந்து உயிரிவாயு எனப்படும் மெதேன் வாயு கசிவதாகவும் சதுப்பில் புதையும் கால் வெளியில் எடுக்கப்படும் போது வாயு வெளியேறி காற்றில் தீப்பற்றிக் கொள்ளுவதாகவும் விளக்குவர். மெதேன் வாயுவுக்கு தமிழ் நாட்டில் கொள்ளிவாயு என்ற பெயர் வழங்கப்படுகிறது.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.