ஆழியாறு அணை
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
ஆழியாறு அணை (Aliyar Reservoir) தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். முன்பெல்லாம் ஆண்டு முழுவதும் வற்றாமல் பாயும் ஆழியாறு, கடல்போலக் காட்சியளிக்கும். ஆழி என்பது கடலைக் குறிக்கும். கடல்போன்ற ஆறு என்பதாலேயே இதற்கு ஆழியாறு என்று பெயர். இந்திய தர நிர்ணய அமைவன பட்டியலில் இவ்வணையானது பெரிய அணைகளின் தொகுப்பின் கீழ் உள்ளது.
ஆழியாறு அணை | |
---|---|
நீர் பிடிப்பு பகுதி | |
அதிகாரபூர்வ பெயர் | ஆழியாறு அணை |
நாடு | இந்தியா |
அமைவிடம் | ஆழியாறுகோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு |
புவியியல் ஆள்கூற்று | 10°28′59″N 76°58′04″E |
நோக்கம் | நீர்ப்பாசனம் |
நிலை | பொது மக்கள் பயன்பாட்டில் |
கட்டத் தொடங்கியது | 1957 |
திறந்தது | 1962[1] |
வடிவமைப்பாளர் | தமிழக அரசு |
உரிமையாளர்(கள்) | தமிழ்நாடு அரசு |
இயக்குனர்(கள்) | தமிழ்நாடு பொதுப்பணித் துறை |
அணையும் வழிகாலும் | |
தடுக்கப்படும் ஆறு | ஆழியாறு |
உயரம் (அடித்தளம்) | 44.19 மீ |
நீளம் | 3200.4 மீ |
கொள் அளவு | 2940 க.மீ3 |
வழிகால் வகை | Ogee[1] |
வழிகால் அளவு | 1161 மீ3/நொடி |
நீர்த்தேக்கம் | |
செயலில் உள்ள கொள் அளவு | 109420 க.மீ3 |
நீர்ப்பிடிப்பு பகுதி | 196.83 ச.கிமீ |
வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த ஆழியாறு அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்[2] முதலில் கட்டி முடிக்கப்பட்ட அணை. 1962இல் இந்த அணை திறக்கப்பட்டது. இந்த அணை காமராஜரால் கட்டப்பட்டது[3].
ஆழியாறு ஆனை மலையில் உற்பத்தியாகின்ற பல ஆறுகளில் ஒன்றாகும். அங்கு உற்பத்தியாகி தமிழ்நாட்டில் வடமேற்கு திசையில் 37 கிமீ பாய்ந்து கேரள மாநிலம் சென்று அங்கு பாரதபுழா ஆற்றில் கலக்கிறது. ஆழியாறு அணைக்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது. அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின் சூலை மற்றும் ஆகத்து மாதம் ஆகும்[4]. அம்பரம்காளையம் தர்கா ஆழியாற்றின் கரையில் உள்ளது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ளது.
ஆழியாறு அணை கட்டியுள்ள பகுதிக்குள் ஓடிய ஆழியாறு ஆற்றின் கிழக்கு கரையில், பல நூறு ஏக்கர் பரப்புக்கு வயல்வெளிகளும், மா, பலா, கொய்யா பயிரிடப்பட்ட தோப்புகளும் சூழ்ந்த சிங்காரத்தோப்பு என்ற சிறிய கிராமம்[5] இருந்தது. தற்போது தண்ணீர் தேங்கி நிற்கும் அணைப் பகுதியில் இருந்த சிங்காரத்தோப்பு கிராமத்தில் வசித்து வந்தவர்கள் இரவாலர்கள். மலைவாழ் மக்களில் ஒரு பிரிவினரான இவர்கள், விவசாயம் மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் ஆயிரம் காணி நெல் வயல்களும் இருந்தன. இவையனைத்தும் ஆழியாறு அணை கட்டப்பட்டபோது, தண்ணீரில் மூழ்கின. அங்கலக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான தோப்பு, இக்கிராமத்தில் இருந்தது. அதில், கொய்யா, மா, பாலா, வாழை விவசாயம் நடைபெற்றது. சுமார் 200 குடிசைகளில் இரவாலர்கள் வாழ்ந்தனர். இந்த ஊருக்கு மேற்கே ஆழியாறு ஆறு சென்றது. ஆழியாறு அணையில் தண்ணீர் குறையும்போது வெளியே தெரியும் கல்பாலமும், கருங்கல் சாலையும் இந்த அணைக்குள் மறைந்த ஒரு கிராமத்தின் வரலாற்று எச்சங்களாக இன்றும் உள்ளன.
உல்லாசப் படகுப் பயண வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.[6] இங்கு மனமகிழ்விற்காக பூங்கா, மீன் காட்சியகம், தீம் பார்க் முதலியன தமிழ்நாடு மீன்வளத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகின்றன
இந்த அணையின் அருகில் சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி இருக்கிறது. இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.