இந்திய திரைப்பட தயாரிப்பாளர், முன்னாள் விளம்பர மாதிரி மற்றும் நடிகை From Wikipedia, the free encyclopedia
ஆயிசா தத் (Ayesha Dutt) (பிறப்பு 5 ஜூன் 1960) இந்திய திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் விளம்பர மாதிரி மற்றும் நடிகை ஆவார்.[1][2] இவர் பாலிவுட் நடிகர் சாக்கி செராப் அவர்களை 1987 ஆம் ஆண்டு மணந்தார். இவருடைய மகன் டைகர் செராப் பாலிவுட் நடிகர் ஆவார்.
ஆயிசா தத் | |
---|---|
தத் 60வது பிலிம்பேர் விருதுகள் | |
பிறப்பு | 05.06.1960 (வயது 63) |
மற்ற பெயர்கள் | ஆயிசா செராப் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1984–2007 |
பெற்றோர் | ரஞ்சன் தத் |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் | டைகர் செராப் உட்பட 2 |
இவருடைய தந்தை பெங்காலி மொழியைச் சேர்ந்த ரஞ்சன் தத் ஆவார். இவர் இந்திய வான்படையில் விமான துணை மார்சல் மற்றும் தாயார் பெல்சிய வம்சாவளியைச் சேர்ந்த பிரெஞ்சு நாட்டவரான கிளாட் மேரி தத் டி கேவி ஆவார்.
மணிலாவில் நடந்த செல்வி இளம் உலகப் போட்டியில் போட்டியிட்டார்.[3] ஆனால் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. அவரது சக போட்டியாளர்களால் போட்டியில் மிகவும் பிரபலமான பெண்ணாக தேர்ந்தெடுக்கப்பட்டார். விளம்பர மாதிரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கி வெற்றியடைந்தார்.
1984 ஆம் ஆண்டு மோக்னிசு பாலுக்கு சோடியாக தெரி பகோன் மெய்ன் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்தார்.[4]
தத் தனது நீண்டகால காதலரும் பாலிவுட் நடிகருமான சாக்கி செராப்பை தனது பிறந்தநாள் ஆன 1987 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் தேதி அன்று மணந்தார். பின்னர் திரைப்பட தயாரிப்பாளராக மாறினார். இந்த சோடி சாக்கி செராப் பொழுதுபோக்கு நிறுவனம் என்ற ஊடக நிறுவனத்தை நடத்துகிறது. சோனி டிவியில் 10% பங்குகளை கூட்டாக வைத்திருந்தனர். நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை அவர்கள் தங்கள் பங்குகளை விற்று, சோனி டிவியுடன் 15 ஆண்டுகால தொடர்பை முடித்துக்கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5] மூத்த குழந்தை பாலிவுட் நடிகர், டைகர் ச்ராப் (பிறப்பு 1990), மற்றும் ஒரு மகள் கிருச்ணா ச்ராப் (பிறப்பு 1993) ஆவார்.[6]
ஆண்டு | தலைப்பு | பங்கு |
---|---|---|
1983 | தேரி பாகோன் மெய்ன் | காஞ்சி |
ஆண்டு | தலைப்பு |
---|---|
2000 | சிசு தேசு மே கங்கா ரெக்தா கைன் |
2001 | கிரகான் |
2003 | ஏற்றம் |
சந்தியா | |
2007 | பாம்பில் மற்றும் பீட்ரைசு |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.