ஆதி பராசக்தி (Aathi Parasakthi) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் படத்திற்கு இசையமைத்தார்.[1]
ஆதி பராசக்தி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் சித்ரா புரொடக்சன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் ஜெயலலிதா |
வெளியீடு | அக்டோபர் 17, 1971 |
நீளம் | 4808 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
படத்தின் சிறப்பு என்னவெனில் அதுவரையில் சமூக கதைகளையே படமாக்கி வந்த கே. எஸ். கோபாலகிருஷ்ணன் பக்திப் பட வரிசையில் முதற்படமாக இப்படத்தை இயக்கினார்.
இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமரிசன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. 1976 ஆம் ஆண்டு இந்தி மொழியில் ஜெய் ஜெகத் ஜனனி என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2][3]
பாடல்கள்
பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் |
---|---|---|
ஆதி பராசக்தி ஆதி பராசக்தி | டி. எம். சௌந்தரராஜன் | |
அத்தாடி மாரியம்மா | சீர்காழி கோவிந்தராஜன் | |
அழகாக கண்ணுக்கு | எஸ். ஜானகி | கண்ணதாசன் |
கொக்கு பறக்கும் | ராதா | |
சொல்லடி அபிராமி | டி. எம். சௌந்தரராஜன் | |
தந்தைக்கு மந்திரத்தை | ராதா | |
நானாட்சி செய்து வரும் | பி. சுசீலா | கண்ணதாசன் |
மாயி மகமாயி | பி. சுசீலா | |
வருக வருகவே | பி. சுசீலா |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.