ஆண்ட்ரூ கிளெமென்ட் செர்கிஸ் (ஆங்கில மொழி: Andrew Clement Serkis)[1] (பிறப்பு: 20 ஏப்ரல் 1964) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் த லார்டு ஆப் த ரிங்ஸ் (2001–2003), ஹாபிட்[2] (2012), ரைஸ் ஆஃப் த பிளானட் ஆஃப் த ஆப்ஸ் (2011-2017) போன்ற திரைப்படங்களில் அசைவூட்டும் கணனி கதாபாத்திரங்களுக்காக மிகவும் பிரபலமானவர் ஆவார். மேலும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த நடிகர்களில் ஒருவராவார்.[3][4][5] இவரின் நடிப்புத்திறனுக்காக ஒரு எம்பயர் விருது மற்றும் இரண்டு சனி விருதுககளைப் பெற்றுள்ளார்.
ஆண்டி செர்கிஸ் | |
---|---|
பிறப்பு | ஆண்ட்ரூ கிளெமென்ட் செர்கிஸ் 20 ஏப்ரல் 1964 மிடில்செக்ஸ், இங்கிலாந்து |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1985–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | லோரெய்ன் ஆஷ்போர்ன் (தி. 2002) |
பிள்ளைகள் | 3 |
2015 ஆம் ஆண்டு மார்வெல் ஸ்டுடியோ தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான்[6] மற்றும் பிளாக் பான்தர் (2018) போன்ற திரைப்படங்களில் 'யுலிஸஸ் கிளாவ்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.