From Wikipedia, the free encyclopedia
ஒரு ஆசிரியர், பள்ளி ஆசிரியர் (Teacher) அல்லது முறையாகக் கல்வியாளர் என்றும் அழைக்கப்படுபவர், கற்பித்தல் மூலம் மாணவர்களுக்கு அறிவு, திறன் அல்லது நல்லொழுக்கத்தைப் பெற உதவுபவர் ஆவார்.
சியேரா லியோனி நாட்டு பென்டெம்புவில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளி வகுப்பறை. | |
தொழில் | |
---|---|
பெயர்கள் | ஆசிரியர், கல்வியாளர் |
வகை | பணி |
செயற்பாட்டுத் துறை | கல்வி |
விவரம் | |
தகுதிகள் | கற்பிக்கும் திறன், இனிய சுபாவம், பொறுமை |
தேவையான கல்வித்தகைமை | ஆசிரியர் பயிற்சிச் சான்றிதழ் |
தொழிற்புலம் | பள்ளிக்கூடங்கள் |
தொடர்புடைய தொழில்கள் | பேராசிரியர், கல்வித்துறை, விரிவுரையாளர், பயிற்சியாளர் |
சராசரி ஊதியம் | $43,009 (அமெரிக்க பொதுத்துறை பள்ளிகள்) 2006-2007 கல்வியாண்டு |
முறைசாரா முறையில் ஆசிரியரின் பங்கு வேறு சிலராலும் ஏற்கப்படலாம் (எ.கா. ஒரு குறிப்பிட்ட பணியை எப்படிச் செய்வது என்பதை சக ஊழியருக்கு சொல்லிக் கொடுக்கும் போது). சில நாடுகளில், பள்ளி வயது இளைஞர்களுக்குக் கற்பித்தல், பள்ளி அல்லது கல்லூரி போன்ற முறையான அமைப்பில் மட்டும் இல்லாமல் வீட்டுக்கல்வி போன்ற முறைசாரா அமைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்படலாம். வேறு சில தொழில்கள் கணிசமான அளவு கற்பித்தலை உள்ளடக்கியிருக்கலாம் (எ.கா. இளைஞர் பணியாளர், போதகர்).
ஒரு ஆசிரியரின் பங்கு கலாச்சாரங்களைப் பொறுத்து வேறுபடலாம்.
கல்வியறிவு மற்றும் எண்ணியல், கைவினைத்திறன் அல்லது தொழிற்பயிற்சி, கலை, மதம், குடிமை, சமூகப் பொறுப்புகள் அல்லது வாழ்க்கைத் திறன்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் வழிமுறைகளை வழங்கலாம்.
முறையான கற்பித்தல் பணிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்திட்டங்களின்படி பாடங்களைத் தயாரித்தல், பாடங்களை வழங்குதல் மற்றும் மாணவர் முன்னேற்றத்தை மதிப்பிடுதல் ஆகியவை அடங்கும்.
ஒரு ஆசிரியரின் தொழில்முறை க் கடமைகள் என்பது வகுப்பறைக் கற்பித்தல் என்பதைத் தாண்டியும் இருக்கலாம். வகுப்பறைக்கு வெளியே ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப்பயணங்களில் செல்லலாம், படிப்புக் கூடங்களைக் கண்காணிக்கலாம், பள்ளிச் செயல்பாடுகளை ஒழுங்கமைப்பதில் உதவலாம் மற்றும் பாடநெறிக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளுக்கு மேற்பார்வையாளர்களாகப் பணியாற்றலாம். கொடுமைப்படுத்துதல், [1] பாலியல் துன்புறுத்தல், இனவெறி அல்லது துஷ்பிரயோகம் போன்றவற்றால் ஏற்படக்கூடிய தீங்கு [2] ஆகியவற்றிலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் சட்டப்பூர்வ கடமையும் அவர்களுக்கு உள்ளது. [3] சில கல்வி முறைகளில், மாணவர்களின் ஒழுக்கத்திற்கு ஆசிரியர்கள் பொறுப்பாக இருக்கலாம்.
ஆசிரியர்கள் முறைசார் கல்வியில் இலக்கியம், கணிதம் மற்றும் அறிவியல் போன்ற பாடங்களை கற்பிப்பதுடன் கலை, சமய நூல்கள், குடிமை மற்றும் வாழும்கலை போன்ற திறன்களையும் கற்பிக்கின்றனர். திருக்குர்ஆன்,விவிலியம் வேதங்கள் போன்ற சமய நூல்களிலும் கொள்கைகளிலும் முல்லாக்கள், மேய்ப்பர், குரு, ராபி எனப்படும் சமயக்குரவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றுகின்றனர்.
இருவென இருந்து - எழுவென எழுந்து - சொல்லெனச் சொல்லி மேல் - கீழ் அடுக்கதிகார முறையைக் கொண்டது குரு - சிஷ்ய உறவு. மாறாக , ஆசிரியர் - மாணவர் உறவு என்பது நட்பு பாராட்டுவது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.