ஆஹிரி

From Wikipedia, the free encyclopedia

ஆஹிரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய வகுளாபரணத்தில் பிறக்கும் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண-வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் பாஷாங்க இராகம் ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி.

இலக்கணம்

ஆரோகணம்:ஸ ரி1 ஸ க31 ப த1 நி2 ஸ்
அவரோகணம்:ஸ் நி2 தா1 ப மா13 ரி 1
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இதர அம்சங்கள்

  • பண்டைத் தமிழிசையில் இந்த இராகத்திற்கு பண் பஞ்சமம் என்று பெயர்.[1]
  • சிலர் இவ்விராகம் 8வது மேளமாகிய தோடியின் ஜன்யம் என்றும், வேறு சிலர் 20வது மேளமாகிய நடபைரவியின் ஜன்யம் என்றும் எண்ணுகின்றார்கள். வகுளாபரணம், தோடி, நடபைரவி ஆகிய மூன்று மேளங்களிலும் தோன்றும் சுரங்கள் இவ்விராகத்தில் வருவதை கவனிக்கவும்.
  • அந்தரகாந்தாரம் இந்த இராகத்திற்கு ஒரு முக்கியமான அம்சம் ஆகும். சுத்த ரிஷபம் கம்பித சுரமாகும்.
  • இவ்விராகத்தில் சௌக கால பிரயோகங்கள் அதிகமாகப் பிரயோகிக்கப்படுகின்றன. பழமையான, முக்கிய இசை நூல்களில் இந்த இராகத்தின் பெயர் காணப்படுகின்றது.
  • இந்த இராகத்தில் மூன்று அன்னிய சுரங்கள் வருகின்றன; பல நுட்ப சுருதிகள் தோன்றுகின்றன; ஆகையால் இது கவனமாகக் கையாளப்பட வேண்டிய இராகம் ஆகும்.

உருப்படிகள் [2]

மேலதிகத் தகவல்கள் வகை, உருப்படி ...
வகைஉருப்படிதாளம்கலைஞர்
கிருதிஆதய சிறீஆதிதியாகராஜ சுவாமிகள்
கிருதிஎடுல காபாடுதுவோதிரிபுடைதியாகராஜ சுவாமிகள்
கமலாம்பா நவாவர்ணம்சிறீ கமலாம்பாதிஸ்ர ஏகம்முத்துஸ்வாமி தீட்சிதர்
நவரத்ன மாலிகைமாயம்மனிஆதிசியாமா சாஸ்திரிகள்
பதம்ராராராதிரிபுடைஷேத்ரக்ஞர்
கிருதிபரமபுருஷமிஸ்ரசாபுசுவாதித் திருநாள் ராம வர்மா
கிருதிஏங்குவதறியானோமிஸ்ரசாபுஅம்புஜம் கிருஷ்ணா
கிருதிதில்லைவலம் சுற்றினார்ரூபகம்கோபாலகிருஷ்ண பாரதியார்
மூடு

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.