அர்ச்சனா ஐ. ஏ. எஸ்.
ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
அர்ச்சனா ஐ.ஏ. எஸ். 1991 ஆம் ஆண்டு சித்தாரா மற்றும் சரத்குமார் நடிப்பில், ஏ. ஜெகந்நாதன் இயக்கத்தில், எஸ். ஏ. ராஜ்குமார் இசையில் வெளியான தமிழ் திரைப்படம்[1][2][3].
அர்ச்சனா ஐ. ஏ. எஸ். | |
---|---|
இயக்கம் | ஏ. ஜெகந்நாதன் |
தயாரிப்பு | அமுதா துரைராஜ் ஒய். ஹேமா அசோக் ரெட்டி சானயாதி ரெட்டி பி. வேதபுரி பி.டி.எஸ்.சேகர் ஏ.பி.சீனிவாசன் தா.டெல்லி |
கதை | அமுதா துரைராஜ் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | விபின்தாஸ் |
படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
கலையகம் | தெய்வானை மூவிஸ் |
வெளியீடு | சூலை 5, 1991 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அர்ச்சனாவின் (சித்தாரா) தந்தை இறந்துவிட்டதால் தாய் பவானி (ஸ்ரீவித்யா) அவளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, அர்ச்சனாவை இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் வெற்றி பெறச் செய்வதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்குகிறாள். தன் தாய் படும் சிரமத்தை உணர்ந்து அக்கறையோடு படிக்கும் அர்ச்சனா கல்லூரியில் புத்திசாலி மாணவியாகத் திகழ்கிறாள். பல பரிசுகளைப் பெறுகிறாள். தன்னுடன் படிக்கும் அனாதையான குமார் (சிவா) மற்றும் மாலா (யாமினி) ஆகியோரோடு நட்புடன் பழகுகிறாள். மாலா கல்லூரிப் பேராசிரியர் சந்தோஷ் குமாரின் (சரத்குமார்) தங்கை. ஒருநாள் சந்தோஷ்குமாரின் கண்ணெதிரே மாலாவைக் கொல்கிறான் தினேஷ் (தளபதி தினேஷ்). அங்குவரும் காவலர்கள் தினேஷையும் அப்பாவியான சந்தோஷ்குமாரையும் கைது செய்கிறார்கள். தன் தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி சிறையிலிருந்து வெளியேறி தண்டனையிலிருந்து தப்புகிறான் தினேஷ்.
அர்ச்சனா இந்திய ஆட்சிப் பணித்தேர்வில் தேர்ச்சி பெற்று மாவட்ட ஆட்சியராகிறாள். சிவா காவல் துறையில் பணியேற்கிறான். தான் விரும்பியபடி தன் மகளை மாவட்ட ஆட்சியராக பணியேற்க வைத்த பவானி அதற்கான காரணத்தைக் கூறுகிறாள். பவானியைக் காதலிப்பது போல் நடித்து ஏமாற்றும் ஆனந்தமூர்த்தி தன்னால் கர்ப்பமான பவானியை கருக்கலைப்பு செய்யக் கட்டாயப்படுத்துகிறான். அவனிடமிருந்து தப்பிக்கும் பவானி அர்ச்சனாவைப் பெற்றெடுத்து வளர்க்கிறாள். அர்ச்சனாவின் தந்தை இறந்துவிட்டதாக பொய்ச்சொல்லி வளர்க்கிறாள். இதைக் கேட்டதும் அர்ச்சனா தன் தாயை ஏமாற்றி தற்போது அமைச்சராக இருக்கும் ஆனந்தமூர்த்தியை தண்டிக்க முடிவுசெய்கிறாள். அதன்பின் நடப்பது மீதிக்கதை.
படத்தின் இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார். பாடலாசிரியர்கள் வாலி, முத்துலிங்கம், நா. காமராசன் மற்றும் எஸ். ஏ. ராஜ்குமார்[4][5][6].
வ.எண் | பாடல் | பாடகர்கள் | காலநீளம் |
---|---|---|---|
1 | வாழ்க்கை என்பது | மனோ, சித்ரா | 4:24 |
2 | அரைகுறை பாஷை | மனோ, அனிதா சுரேஷ் | 5:02 |
3 | உனக்கெனவே | வாணி ஜெயராம் | 5:00 |
4 | மலிவு விலையிலே | எஸ். ஏ. ராஜ்குமார் | 4:25 |
5 | நாலு வார்த்தை | பி. ஜெயச்சந்திரன் , சித்ரா | 4:37 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.