இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
கோபாலரத்னம் எனும் இயற்பெயரைக் கொண்ட டைப்பிஸ்ட் கோபு (இறப்பு: மார்ச் 6, 2019) 600 இற்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்தவர்.[1][4][5]
திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்னம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் சோ மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.
1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1] 1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.
பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது.[6] இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.[7]
டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார்.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.