அன்னை வயல்
1992இல் வெளியானத் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
அன்னை வயல் (Annai Vayal) என்பது 1992 ஆம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான திரைப்படமாகும். இதை பொன்வண்ணன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் விக்னேஷ், ராஜ் முரளி, வினோதினி மற்றும் ராயல்சிறீ ஆகியோர் நடித்துள்ளனர். இது 1992 செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட்டு திரையரங்க வசூலில் தோல்வியடைந்தது.
அன்னை வயல் | |
---|---|
இயக்கம் | பொன்வண்ணன் |
தயாரிப்பு | குருஜி |
கதை | பொன்வண்ணன் |
இசை | சிற்பி |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கே. வி. மணி |
படத்தொகுப்பு | கே. பழனிவேல் |
கலையகம் | சிறீ ராஜராஜேஸ்வரி பிலிம் கார்பொரேஷன் |
வெளியீடு | 27 செப்டம்பர் 1992 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ்ல் |
நடிகர்கள்
- விக்னேஷ்
- ராஜ் முரளி
- வினோதினி
- ராயல்சிறீ
- மா. நா. நம்பியார்
- ஜெயபாரதி
- செந்தில்
- நந்தகோபால்
- ஜானகி
- எஸ். என். லட்சுமி
- சத்யா
- குழந்தை பவானி
- மீசை வாத்தியார்
- பெரிய கருப்பு தேவர்
- மாணிக்கராஜ்
தயாரிப்பு
இப்படத்தின் மூலம் பொன்னண்ணன் இயக்குநராக அறிமுகமானார்.[1] மேலும் படத் தயாரிப்பாளர் குருஜியின் மகன் ராஜ் முரளியும் இந்த படத்தின் மூலம் அறிமுகமானார். வினோதினிக்கு சவிதா ராதாகிருஷ்ணன் பின்னணி குரல் அளித்திருந்தார்.[2]
ஒலிப்பதிவு
இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சிற்பி இசையமைத்திருந்தார்.[3] படம் திரையரங்கில் போதுமான வசூலிலை ஈட்டவில்லை என்றாலும். இரண்டு பாடல்களின் வரிகளை எழுதிய பழநிபாரதிக்கு அதிக திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.[4]
வெளியீடும் மற்றும் வரவேற்பும்
அன்னை வயல் திரைப்படம் 1992 செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது.[5] இந்தியன் எக்சுபிரசு பத்திரிக்கையின் விமர்சகர் மாலினி மன்னத், முதன்மையாக பொன்னண்ணனின் உரையாடல்கள், ஒளிப்பதிவு, படத் தொகுப்பு மற்றும் இசைக்கு நேர்மறையான விமர்சனங்களை வழங்கினார். விக்னேஷ் மற்றும் வினோதினியின் நடிப்பையும் அவர் பாராட்டினார், ஆனால் ராஜ் முரளி "தனது நடிப்பில் அதிக கவனம் கொள்ள வேண்டும்" என்று எழுதினார். தயாரிப்பாளருடனான படைப்பு வேறுபாடுகள் காரணமாக படம் தான் எதிர்பார்த்தபடி வெளிவரவில்லை என்றும் அதனால் படம் திரையரங்கில் தோல்வியடைந்தது என்றும் பொன்வண்ணன் கூறியிருந்தார்.[6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.