![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/SE2019Dec26A.png/640px-SE2019Dec26A.png&w=640&q=50)
2019 திசம்பர் 26 கதிரவ மறைப்பு
சூரிய கிரகணம் / From Wikipedia, the free encyclopedia
வலய கதிரவ மறைப்பு (annular solar eclipse) ஒன்று 2019 திசம்பர் 26 இல் நிகழ்ந்தது. புவிக்கும் கதிரவனுக்கும் இடையே நிலா வரும் போது கதிரவ மறைப்பு முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ புவியில் இருந்து பார்ப்பவர்களுக்குத் தோன்றுகிறது. நிலாவின் தோற்ற விட்டம் கதிரவனுடையதை விடக் குறைவாக இருக்கும் போது வலய மறைப்பு ஏற்படுகிறது. இதன்போது, கதிரவனின் பெரும்பாலான கதிர்கள் புவிக்கு வருவது தடுக்கப்பட்டு சூரியன் வட்டவலயமாகத் தோன்றுகிறது. வலய மறைப்பு புவியின் ஒரு பகுதியில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தை சுற்றியுள்ள பகுதியில் தெரியும்.[1]
திசம்பர் 26, 2019-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | வலய மறைப்பு |
காம்மா | 0.4135 |
அளவு | 0.9701 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | 220 வி (3 நி 40 வி) |
ஆள் கூறுகள் | 1°N 102.3°E / 1; 102.3 |
பட்டையின் அதியுயர் அகலம் | 118 km (73 mi) |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 5:18:53 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 132 (46 of 71) |
அட்டவணை # (SE5000) | 9552 |
இந்த வலய மறைப்பு சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான், பாக்கித்தான், இந்தியா, இலங்கை, வங்காளதேசம், மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், வடக்கு மரியானா தீவுகள், குவாம் ஆகிய பகுதிகளில் தென்பட்டது. இவ்வலய மறைப்பின் பாதையில் கோழிக்கோடு, கோயம்புத்தூர், யாழ்ப்பாணம், திருக்கோணமலை, பத்தாம், சிங்கப்பூர், சிங்காவாங் ஆகிய நகரங்களிலும் தெரிந்தன. தோகா, மதுரை, பெக்கான்பாரு, துமாய், ஜொகூர் பாரு, கூச்சிங் ஆகிய நகரங்கள் மறைப்பின் வழியை குறுகிய இடைவெளியில் இழந்தன.
விண்வெளி வானிலை நிலைமைகளை இயக்குவதில் சூரிய குறுக்க்க் காந்தப்புலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இக்காந்தப்புலங்களின் நேரடி அவதானிப்புகள் சவாலானவை. கோட்பாட்டு மாதிரிகளை அவதானிப்புகள் மூலம் அறிய இத்தகைய கதிரவ மறைப்பு நிகழ்வுகள் அறிவியலாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகின்றன. இந்த வருடாந்திர கிரகணத்திற்கான காந்தப்புல அமைப்பு தரவு-கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளின் கலவையைப் பயன்படுத்தி கணிக்கப்படுகிறது. கணிப்பு முடிவுகள் இங்கு காணலாம்.[2]