2015 ரக்பி உலகக்கிண்ணம் (2015 Rugby World Cup) 8வது ரக்பி உலகக்கிண்ணம் ஆகும். இது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. இவ்வுலகக்கிண்ணப் போட்டிகள் 18 செப்டம்பர் 2015 அன்று ஆரம்பமாகியதுடன் 31 ஒக்டோபர் 2015 வரை நடைபெறவுள்ளது.[1] ட்வுக்கிங்காம் அரங்கத்தில் இவ்வுலகக்கிண்ண இறுதிப்போட்டி இடம்பெறும். சூலை 2009 அன்று இவ்வுலகக்கிண்ணப் போட்டியை இங்கிலாந்தில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது.[2] இவ்வுலகக்கிண்ணப் போட்டியில் இருபது நாடுகளைச்சேர்ந்த அணிகள் பங்குபற்றுகின்றன. அவற்றும் 12 அணிகள் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ரக்பி உலகக்கிண்ணப் போட்டியின் மூலம் தெரிவுசெய்யப்பட்டவை. ஏனைய 8 அணிகளும் பிரதேச சுற்றுப்போட்டிகள் மூலம் தெரிவுசெய்யப்பட்டன.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
போட்டி விபரங்கள் | |
---|---|
நடத்தும் நாடு | இங்கிலாந்து |
காலம் | 18 செப்டம்பர் – 31 ஒக்டோபர் |
நாடுகளின் எண்ணிக்கை | 20 (102 qualifying) |
போட்டி புள்ளிவிவரங்கள் | |
விளையாடிய ஆட்டங்கள் | 12 |
பார்வையாளர்கள் | 6,42,397 (53,533 / ஆட்டம்) |
← 2011 2019 → |
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.