2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற்றது. சார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலும் இதனுடன் இணைந்து நடைபெற்றது.அதன் முந்தைய சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2015, சனவரி 1 அன்று முடிவடைகிறது. இத்தேர்தலில் 7,225,559 மக்கள் 87 சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வர். 87இல் 7 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் 91% ஆகும். 10,015 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் யாருக்கும் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்ற விருப்பத் தேர்வும் இருந்தது. தேர்தல் முடிவு டிசம்பர் 23 அன்று வாக்குபதிவு எண்ணிக்கையன்றே அறிவிக்கப்பட்டது. மூன்று தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் தாள் (காகிதம்) மூலம் வாக்கு செலுத்தும் வசதியும் இருக்கும்.[1][2] உமர் அப்துல்லா பீர்வாக், சோனாவார் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டனர் [3] 2008இல் உமர் அப்துல்லா கான்டர்பால் தொகுதியில் வென்றார்.[4]
விரைவான உண்மைகள் அனைத்து 87 இடங்களும் சட்டமன்றம் அதிகபட்சமாக 44 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்தோர் ...
2014 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ce/Flag_of_Jammu_and_Kashmir_%281952-2019%29.svg/50px-Flag_of_Jammu_and_Kashmir_%281952-2019%29.svg.png)
|
← 2008 |
25 நவம்பர் முதல் 20 டிசம்பர் 2014 வரை |
2024 → |
|
அனைத்து 87 இடங்களும் சட்டமன்றம் அதிகபட்சமாக 44 தொகுதிகள் தேவைப்படுகிறது |
---|
பதிவு செய்தோர் | 73,16,946 |
---|
வாக்களித்தோர் | 65.91% ( 4.75%) |
---|
|
|
|
மூடு