1,2-பென்சோகுயினோன்
From Wikipedia, the free encyclopedia
1,2-பென்சோகுயினோன் (1,2-Benzoquinone) என்பது C6H4O2 என்ற மூலக்கூற்று வாய்பாடுடைய ஒரு வளைய கீட்டோன் ஆகும். இச்சேர்மம் வளைய எக்சா-3, 5-டையீன், --டையோன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அறியப்பட்டுள்ள குயினோனின் மாற்றியன்களில் இதுவும் ஒன்றாகும். 1,4-பென்சோகுயினோன் என்பது மற்றொரு மாற்றியன் ஆகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
சைக்ளோயெக்சா-3,5-டையீன்-1,2-டையோன் | |||
வேறு பெயர்கள்
1,2-பென்சோகுயினோன், o-பென்சோகுயினோன், o-குயினோன் | |||
இனங்காட்டிகள் | |||
583-63-1 N | |||
ChEBI | CHEBI:17253 Y | ||
ChemSpider | 10941 Y | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
KEGG | C02351 Y | ||
பப்கெம் | 11421 | ||
| |||
UNII | SVD1LJ47R7 Y | ||
பண்புகள் | |||
C6H4O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 108.0964 கி/மோல் | ||
அடர்த்தி | 1.256 கி/செ.மீ3 | ||
கொதிநிலை | 213.3 °C (415.9 °F; 486.4 K) 760 மி.மீ பாதரசம் அழுத்தத்தில் | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 76.4 °C (169.5 °F; 349.5 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
நீர்க் கரைசலில் கேட்டகாலை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்து [1][2] அல்லது பீனாலை[1] ஆர்த்தோ ஆக்சிசனேற்றம் செய்து 1,2-பென்சோகுயினோன் உற்பத்தி செய்யப்படுகிறது. சிவப்பு நிறத்திலுள்ள இச்சேர்மம் மெலானின் தயாரிப்பதற்கான முன்னோடியாக திகழ்கிறது.[3] தண்ணீரில் கரையும் தன்மையும் எத்தில் ஈதரில் கரையாத தன்மையும் கொண்டிருக்கிறது.
கிராம்-எதிர் வகை சூடோமானசு மெண்டோசினா பாக்டீரியாக்கள், பென்சோயிக் அமிலத்தை வளர்சிதை மாற்றம் செய்யும்போது கேட்டகால் வழியாக 1,2-பென்சோகுயினோனை இறுதி விளைபொருளாகக் கொடுக்கின்றன.[2]