![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/Empty_fuel_trucks_crossing_border_into_Pakistan_in_February_2010.jpg/640px-Empty_fuel_trucks_crossing_border_into_Pakistan_in_February_2010.jpg&w=640&q=50)
ஸ்பின் போல்டாக்
From Wikipedia, the free encyclopedia
ஸ்பின் போல்டாக் (Spin Boldak (ஆங்கில மொழி: வெள்ளைப் பாலைவனம்) ஆப்கானித்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது ஆப்கானித்தான்-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. ஸ்பின் போல்டாக் நகரம், வடக்கில் உள்ள காந்தாரம் மற்றும் பாகிஸ்தானின் தெற்குகில் உள்ள சாமன் மற்றும் குவெட்டா நகரங்களுடன் நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஸ்பின் போல்டாக் நகரம் ஆப்கானித்தானையும், பாகிஸ்தானையும் இணைக்கும் பெரும் வணிகப்பாதை நகரமாகும். ஸ்பின் போல்டாக் நகரத்திற்கு மிக அருகில் உள்ள சாமன் நகரம் 10 கிமீ தொலைவில் பாகிஸ்தானில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 4,009 அடி (1,222 மீட்டர்) உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.
ஸ்பின் போல்டாக்
| |
---|---|
![]() ஸ்பின் போல்டாக் எல்லைச்சாவடியை நோக்கிக் கடக்கும் வாகனங்கள் | |
ஆள்கூறுகள்: 31°0′29″N 66°23′53″E | |
நாடு | ![]() |
மாகாணம் | கந்தகார் |
மாவட்டம் | ஸ்பின் போல்டாக் |
ஏற்றம் | 4,009 ft (1,222 m) |
மக்கள்தொகை | |
• இனக்குழுக்கல் | நூர்சாய் மக்கள் பஷ்தூன் மக்கள் |
• சமயம் | இசுலாம் |
நேர வலயம் | UTC+4:30 |
இந்நகரத்தில் நூர்சாய் மக்கள் மற்றும் பஷ்தூன் மக்கள் நிரம்பியுள்ளனர்[1]
ஸ்பின் போல்டாக் நகரம் கந்தகார் மற்றும் குவெட்டா நகரங்களிலிருந்து 50 nmi (93 km) தொலைவில் உள்ளது.[2]தாலிபான்கள் சூலை 2021-இல் ஸ்பின் போல்டாக் நகரத்தைக் கைப்பற்றி கொடியேற்றினர்.[3]