ஸ்டூவர்ட் பிரோட்
From Wikipedia, the free encyclopedia
ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜான் பிரோட்: (Stuart Christopher John Broad , பிறப்பு: ஜூன் 24, 1986) என்பவர் இங்கிலாந்து அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவராவார். வலது-கை மித வேகப் பந்துவீச்சாளரான இவர் இடது-கை மட்டையாளர் ஆவார். இவர் லீசெஸ்டெர்ஷயர் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். பின் நாட்டிங்ஹாம்ஷயர் மாகாணத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடுகிறார். இதே அணிக்காக இவரது தந்தையும் விளையாடினார். ஆகஸ்டு 2006 இல் துடுப்பாட்ட சங்கத்தின் சிறந்த இளவயது வீரருக்கான விருதினைப் பெற்றார்.
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | ஸ்டூவர்ட் கிறிஸ்டோபர் ஜோன் பிரோட் |
பிறப்பு | 24 சூன் 1986 (1986-06-24) (அகவை 37) நொட்டிங்காம், இங்கிலாந்து |
பட்டப்பெயர் | பிரோடி[1] |
உயரம் | 6 அடி 5 அங் |
மட்டையாட்ட நடை | இடதுகை |
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு-மிதம் |
பங்கு | பந்து வீச்சுசாளர் |
உறவினர்கள் | கிறிஸ் பிரோட் (தந்தை) |
பன்னாட்டுத் தரவுகள் | |
நாட்டு அணி | |
தேர்வு அறிமுகம் (தொப்பி 638) | திசம்பர் 9 2007 எ. இலங்கை |
கடைசித் தேர்வு | திசம்பர் 7 2010 எ. ஆத்திரேலியா |
ஒநாப அறிமுகம் (தொப்பி 197) | ஆகத்து 30 2006 எ. பாக்கிஸ்தான் |
கடைசி ஒநாப | செப்டம்பர் 22 2010 எ. பாக்கிஸ்தான் |
ஒநாப சட்டை எண் | 8 |
மூலம்: ESPNcricinfo, 3 டிசம்பர் 2019 |
2009 ஆம் ஆண்டில் ஓவல் துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஆஷஸ் தொடரின் ஐந்தாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார். அந்தப் போட்டியில் 37 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 5 மட்டையாளர்களை வீழ்த்தினார். சூலை 30,2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் மும்முறை வீழ்த்தினார்.இந்தப்போட்டியில் 46 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். 6/46 எனும் இந்த பந்துவீச்சு தான் இவரின் தற்போது வரையிலான சிறந்த பந்துவீச்சு ஆகும்.[2] ஆகஸ்ட் 2010 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 169 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் 9ஆவது வீரராகத் களமிறங்கி அதிக ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். 2012 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 72 ஓட்டங்கள் கொடுத்து 7 மட்டையாளர்களை வீழ்த்தினார். இங்கிலாந்து அணிக்காக அதிக மட்டையாளர்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஜேம்ஸ் அண்டர்சனுக்கு அடுத்து பிரோட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.