வோல்கா ஆறு
ருசியாவிலுள்ள ஆறு, ஐரோப்பாவில் மிக நீளமான ஆறு / From Wikipedia, the free encyclopedia
வோல்கா ஆறு (உருசியம்: Во́лга, பஒஅ: [ˈvolɡə]( கேட்க)) ஐரோப்பாக் கண்டத்தின் மிகவும் நீளமான ஆறு. இது உருசிய நாட்டின் மத்திய பகுதியினூடாகப் பாய்ந்து காஸ்பியன் கடலில் கலக்கிறது. இது உருசியாவின் தேசிய ஆறாகவும் கருதப்படுகிறது. உருசிய நாட்டின் தலைநகர் மாஸ்கோ உட்பட ரசிய நாட்டின் 20 பெரிய நகரங்களுள் 11 இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன.
வோல்கா ஆறு (Река Волга) | |
---|---|
ஈரோஸ்லாவல் நகரத்தில் வோல்கா | |
நாடு | ரசியா |
முதன்மை நகரங்கள் |
அஸ்ட்ரகான், வோல்காகிராத், சமாரா, கசான், உலியாநொவ்ஸ்க், நீஸ்னி நோவ்கோரத், ஈரோஸ்லாவல் |
நீளம் | 3,692 கிமீ (2,294 மைல்) |
வடிநிலம் | 13,80,000 கிமீ² (5,32,821 ச.மைல்) |
வெளியேற்றம் | வோல்காகிராத் |
- சராசரி | |
மூலம் | வோல்காவேர்கொவியே |
- அமைவிடம் | வல்தாய் மேட்டுப் பகுதி, திவேர் மாகாணம் |
- உயரம் | 228 மீ (748 அடி) |
கழிமுகம் | காசுப்பியன் கடல் |
- உயரம் | −28 மீ (−92 அடி) |
முதன்மைக் கிளை ஆறுகள் | |
- இடம் | காமா ஆறு |
- வலம் | ஒகா ஆறு |
வோல்காவின் நீர்வடிப்பகுதியின் வரைபடம்
| |
திவேர் மாகாணம் அஸ்தாவ்ஸ்கிப் பகுதியில் உள்ள வோல்காவேர்கொவியே எனும் கிராமத்தில் கடல் மட்டத்தில் இருந்து 228 மீட்டர்கள் உயரத்தில் வோல்கா ஆற்றின் நீரூற்று அமைந்துள்ளது. வோல்காவின் நீரேந்து பிரதேசம் வல்தாய் மேட்டுப் பகுதிகள், மத்திய உருசிய மேட்டுப் பகுதிகள் ஆகியனவற்றில் தொடங்கி கிழக்கு நோக்கி உரால் மலைகள் வரை பரந்துள்ளது. வோல்கா ஆற்றின் நீளம் 3690 கிலோமீட்டர்கள் ஆகும்.[1] உருசியக் கலாச்சாரத்தில் இந்த ஆறு ஒரு முக்கிய அடையாளத்தைக் கொண்டுள்ளதுடன் உருசிய இலக்கியத்திலும் நாட்டுப்புறக் கலைகளிலும் வோல்கா-மாத்துஷ்கா (தாய் வோல்கா) என அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.