வே. தங்கபாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
வே. தங்கபாண்டியன் (V. Thangapandian; 13 செப்டம்பர் 1933[1] - 31 சூலை 1997) ஒரு தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். திராவிட முன்னேற்றக் கழக (திமுக) உறுப்பினரான இவர், அக் கட்சியின் இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் (1974-97), சட்ட மேலவை உறுப்பினர் (1968-74), அருப்புக்கோட்டை தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் (1989-91; 1996-97),[2][3] தமிழ்நாட்டுக் கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் (1996-97), வணிகவரித்துறை அமைச்சர் (சனவரி - சூலை 1997) ஆகிய பொறுப்புகளை வகித்துள்ளார்.
விரைவான உண்மைகள் மாண்புமிகுV. Thangapandian, வணிகவரித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு ...
மாண்புமிகு V. Thangapandian | |
---|---|
வே. தங்கபாண்டியன் | |
வணிகவரித்துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 22 சனவரி 1997 – 31 சூலை 1997 | |
முதலமைச்சர் | மு. கருணாநிதி |
முன்னையவர் | மு. கருணாநிதி |
பின்னவர் | மு. கருணாநிதி |
கூட்டுறவு மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் தமிழ்நாடு அரசு | |
பதவியில் 13 மே 1996 – 22 சனவரி 1997 | |
முதலமைச்சர் | மு. கருணாநிதி |
முன்னையவர் | சி. பி. பட்டாபிராமன் (கூட்டுறவு) |
பின்னவர் | கே. என். நேரு |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 13 மே 1996 – 31 சூலை 1997 | |
முன்னையவர் | வி.ஜி. மணிமேகலை |
பின்னவர் | தங்கம் தென்னரசு (இடைத்தேர்தல்; 1998-2001) |
தொகுதி | அருப்புக்கோட்டை |
பதவியில் 27 சனவரி 1989 – 30 சனவரி 1991 | |
முன்னையவர் | எம். பிச்சை (1984-86) பஞ்சவர்ணம் (1986-89) |
பின்னவர் | வி.ஜி. மணிமேகலை |
தொகுதி | அருப்புக்கோட்டை |
தமிழ்நாடு சட்ட மேலவை உறுப்பினர் | |
பதவியில் 1 மார்ச் 1968 – 29 பிப்ரவரி 1974 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 13 செப்டம்பர் 1933 சாயல்குடி, இராமநாதபுரம் மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 31 சூலை 1997(1997-07-31) (அகவை 63) இராசபாளையம், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | தமிழர் |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) |
துணைவர் |
|
பிள்ளைகள் | தமிழச்சி தங்கப்பாண்டியன் (மகள்) தங்கம் தென்னரசு (மகன்) |
பெற்றோர் | வேலு நாச்சியார் (தாய்) வேலுச்சாமி (தந்தை) |
முன்னாள் கல்லூரி | தியாகராசர் கல்லூரி, மதுரை |
புனைப்பெயர்(s) | 'தங்கா' பாண்டியன் மல்லாங்கிணறு சார் |
மூடு
இவர் மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன், திமுக சார்பில் தென்சென்னை தொகுதிக்கான இந்திய மக்களவை உறுப்பினராக (2019-) உள்ளார். மகன் தங்கம் தென்னரசு, தமிழ்நாட்டு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக (2023-) உள்ளார்.