![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/99/Veena_Malik_Latest_Pic.jpg/640px-Veena_Malik_Latest_Pic.jpg&w=640&q=50)
வீணா மாலிக்
பாகிஸ்தானிய நடிகை / From Wikipedia, the free encyclopedia
வீணா மாலிக் (Veena Malik) என்று அழைக்கப்படும் ஜாகிதா மாலிக் (பிறப்பு: பிப்ரவரி 26, 1984) ஒரு பாக்கிதான் நடிகையும், தொலைக்காட்சி தொகுப்பாளரும், நேரடி நிகழ்ச்சிகளின் தொலைக்காட்சி ஆளுமையும் பாக்கித்தான் மற்றும் பாலிவுட் திரைப்படங்களில் தோன்றிய நடிகை ஆவார்.[3]
வீணா மாலிக் | |
---|---|
![]() | |
தாய்மொழியில் பெயர் | وينا ملک |
பிறப்பு | ஜாகிதா மாலிக் 26 பிப்ரவரி 1976 இராவல்பிண்டி, பஞ்சாப், பாக்கிதான் |
தேசியம் | பாக்கிதானியர் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2000–2016 |
வாழ்க்கைத் துணை | |
பிள்ளைகள் | 2[2] |
வீணா 2000 ஆம் ஆண்டில் சஜ்ஜாத் குலின் தேரே பியார் மெயின் என்ற திரைப்படத்தின் மூலம், திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டில், இவர் அக்பர் கானின் யே தில் ஆப் கா ஹுவா மற்றும் சாசி புன்னோ ஆகிய படங்களில் நடித்தார், பின்னர் கோய் துஜ் சா கஹான் (2005), மொஹாபத்தான் சச்சியன் (2007), கியுன் தும் சே இட்னா பியார் ஹை (2005) போன்ற பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்களில் நடித்தார்.
2008ல், கபி பியார் நா கர்ணன் மற்றும் இஷ்க் பீ பர்வா போன்ற திரைப்படங்களில் நடித்தார். 2012 ஆம் ஆண்டில், பாலிவுட்டில் தால் மெய்ன் குச் காலா ஹை என்ற நகைச்சுவைப் படத்தில் அவர் நடித்துள்ளார். அதற்கு அடுத்த ஆண்டு, நகைச்சுவை-நாடகமான ஜிண்டகி 50-50, சூப்பர்மாடல் மற்றும் கன்னட திரைப்படமான டர்ட்டி பிக்சர்", சில்க் சக்காத் மாகா ஆகியவற்றில் தோன்றினார். அவர் 2014 திகில் திரைப்படமான மும்பை 125 கி.மீ 3 டி யிலும் நடித்துள்ளார். மேலும், அவர் 2010 இல் பிக் பாஸில் ஒரு போட்டியாளராக இருந்தார்.