வில்லியம் ஷாக்லி
அமெரிக்க இயற்பியலாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
வில்லியம் சொக்லி (William Bradford Shockley, பெப்ரவரி 13, 1910 – ஆகஸ்ட் 12, 1989) டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த மூவருள் ஒருவர். பிரித்தானியாவில் பிறந்த அமெரிக்க இயற்பியலாளர். இவருக்கும் இவருடன் சேர்ந்து டிரான்சிஸ்டரைக் கண்டுபிடித்த ஜோன் பார்டீன், வால்டர் பிராட்டன் ஆகியோருக்கு 1956 ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
விரைவான உண்மைகள் William Shockley, பிறப்பு ...
William Shockley | |
---|---|
பிறப்பு | William Bradford Shockley Jr. (1910-02-13)பெப்ரவரி 13, 1910 இலண்டன் பெருநகர்ப் பகுதி, இங்கிலாந்து, United Kingdom |
இறப்பு | ஆகத்து 12, 1989(1989-08-12) (அகவை 79) Stanford, California, United States |
தேசியம் | American |
பணியிடங்கள் |
|
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வு நெறியாளர் | John C. Slater |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
மூடு
தான் வடிவமைத்த ஒரு வித டிரான்சிஸ்டரை வணிகமயமாக்க முற்பட்ட போது, அதன் விளைவாக உண்டானதே இன்றைய "சிலிகான் பள்ளத் தாக்கு". இதுவே இன்று மின்னணுத் தொழில்நுட்ப நூதனத்தில் மேலோங்கி நிற்கிறது. பிற்காலத்தில் இவர் ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக பணியாற்றினார். மேலும், செயற்கைத் தேர்வின் மூலம், மனித இனத்தை மேம்படுத்தும் (அப்படி நினைத்தார்) முயற்சிக்கும், ஆதரவாகச் செயல்பட்டார்.