விண்மீன் கோட்டுரு
From Wikipedia, the free encyclopedia
கோட்டுருவியலில் விண்மீன் அல்லது விண்மீன் கோட்டுரு (star) Sk என்பது முழு இருகூறு கோட்டுருவாகும். இக்கோட்டுரு ஒரு உள்முனையும் k இலைகளும் கொண்ட மரமாக (K1,k) இருக்கும். k ≤ 1 எனில் இம்மரத்தில் உள்முனை இருக்காது, k + 1 இலைகள் இருக்கும்).
விரைவான உண்மைகள் விண்மீன், முனைகள் ...
விண்மீன் | |
---|---|
விண்மீன் S7. (சிலர் இதனை S8 என்றும் குறிப்பதுண்டு.) | |
முனைகள் | k+1 |
விளிம்பு | k |
விட்டம் | (2, k) இன் சிறுமவளவு |
சுற்றளவு | ∞ |
நிற எண் | (2, k + 1) இன் சிறுமவளவு |
நிறச் சுட்டெண் | k |
இயல்புகள் | விளிம்புக்-கடப்பு மரம் அலகு தொலைவு இருகூறானது |
Notation | Sk |
மூடு
மாறாக, சில நூலாசிரியர்கள் விண்மீனை (Sk) அதிகபட்சம் 2 அலகு விட்டமும் k வரிசையும் கொண்ட மரமாக வரையறுக்கின்றனர். இந்த வகையில் k > 2 எனில் அந்த விண்மீனில் k − 1 இலைகள் இருக்கும்
ஒன்றுக்கும் அதிகமான படிகொண்ட அதிகபட்ச முனைகள் ஒன்று மட்டுமேயுள்ள இணைப்புள்ள கோட்டுருக்களாகவும் விண்மீன் கோட்டுருக்களை வரையறுக்கலாம்.