விஜய் சேதுபதி
இந்திய நடிகர் / From Wikipedia, the free encyclopedia
விஜய் சேதுபதி (16 சனவரி 1978) என்பவர் தமிழ்நாட்டை சேர்ந்த திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் தென்மேற்கு பருவக்காற்று (2010), பீட்சா (2012), நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012), நானும் ரௌடி தான் (2015), சேதுபதி (2016 திரைப்படம்) (2016), 96 (2018) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படும் நடிகர் ஆவார். இவர் இரண்டு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் மூன்று விஜய் விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.
விரைவான உண்மைகள் விஜய் சேதுபதி, பிறப்பு ...
விஜய் சேதுபதி | |
---|---|
பிறப்பு | விஜய குருநாத சேதுபதி 16 சனவரி 1978 (1978-01-16) (அகவை 46) இராஜபாளையம், விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா |
இருப்பிடம் | சென்னை, தமிழ்நாடு |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | சேதுபதி |
படித்த கல்வி நிறுவனங்கள் | தன்ராஜ் பெய்ட் ஜெயின் கல்லூரி |
பணி | நடிகர், தயாரிப்பாளர். பாடகர், நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2004 - தற்போது வரை[1] |
வாழ்க்கைத் துணை | ஜெஸ்ஸி (2003) |
மூடு