வாலி (தமிழ்த்திரைப்படம்)
எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
வாலி (Vaalee) 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் சிம்ரனும், ஜோதிகாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை எஸ். ஜே. சூர்யா இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.[2] இதே திரைப்படம் கன்னடத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு தேவாவின் இசையமைப்பில் உருவாக்கப்பட்டு 2001 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் திரையிடப்பட்டு பெங்களூரில் 100 நாட்களுக்கு ஓடி சாதனைபடைத்த படமாகும்.[3]