வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி (Point Pedro Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தில் வட்டுக்கோட்டை நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் வட்டுக்கோட்டைத் தேர்தல் தொகுதி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

1947 தேர்தல்கள்

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 கே. கனகரத்தினம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்யானை11,72161.24%
வி. வீரசிங்கம்குடை2,23411.67%
ஹண்டி பேரின்பநாயகம்பேருந்து1,7168.97%
வி. பரமநாயகம்கை1,5408.05%
கே. சண்முகம்தராசு1,1005.75%
ஆர். இரகுபதிவிளக்கு8274.32%
தகுதியான வாக்குகள்19,138100.00%
நிராகரிக்கப்பட்டவை274
மொத்த வாக்குகள்19,412
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்37,334
வாக்குவீதம்52.00%
மூடு

1952 தேர்தல்கள்

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
வி. வீரசிங்கம்சுயேட்சைஈருருளி5,68724.47%
 கே. கனகரத்தினம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்கை5,26122.64%
 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]தராசு4,50019.36%
தில்லைநாதன் ருத்ராகுடை3,03313.05%
சி. இரகுநாதன்யானை2,46710.61%
அ. வைத்திலிங்கம்சாவி2,2949.87%
தகுதியான வாக்குகள்23,242100.00%
நிராகரிக்கப்பட்டவை495
மொத்த வாக்குகள்23,737
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்34,135
வாக்குவீதம்69.54%
மூடு

1956 தேர்தல்கள்

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு14,93757.92%
 அ. வைத்திலிங்கம்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்10,85042.08%
தகுதியான வாக்குகள்25,787100.00%
நிராகரிக்கப்பட்டவை361
மொத்த வாக்குகள்26,148
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்35,927
வாக்குவீதம்72.78%
மூடு

1960 (மார்ச்) தேர்தல்கள்

1960 ஆம் ஆண்டில் பருத்தித்துறைத் தேர்தல் தொகுதியில் இருந்து உடுப்பிட்டி நகரைச் சேர்ந்த பகுதிகள் உடுப்பிட்டி தேர்தல் தொகுதி என்ற தனித் தொகுதியாகப் பிரிக்கப்பட்டது.

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு11,52453.52%
 சண்முகம் சுந்தரசிவம்லங்கா சமசமாஜக் கட்சிசாவி3,61416.78%
 அ. வைத்திலிங்கம்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்3,18014.77%
 எம். பி. சங்கரப்பிள்ளைஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி2,95513.72%
சி. எஸ். இரத்தினசபாபதிசூரியன்2601.21%
தகுதியான வாக்குகள்21,533100.00%
நிராகரிக்கப்பட்டவை289
மொத்த வாக்குகள்21,822
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்28,955
வாக்குவீதம்75.37%
மூடு

1960 (சூலை) தேர்தல்கள்

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு13,45472.10%
 அ. வைத்திலிங்கம்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்5,20627.90%
தகுதியான வாக்குகள்18,660100.00%
நிராகரிக்கப்பட்டவை265
மொத்த வாக்குகள்18,925
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்28,955
வாக்குவீதம்65.36%
மூடு

1965 தேர்தல்கள்

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு15,49860.78%
 கே. சுப்பிரமணியம்அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி4,35917.09%
அருணாசலம் தம்பிப்பிள்ளைகுடை4,08216.01%
 ஐ. ஆர். அரியரத்தினம்இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிவிண்மீன்1,5616.12%
தகுதியான வாக்குகள்25,500100.00%
நிராகரிக்கப்பட்டவை290
மொத்த வாக்குகள்25,790
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்36,935
வாக்குவீதம்69.83%
மூடு

1970 தேர்தல்கள்

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 ஆ. தியாகராஜாஅகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்ஈருருளி14,35951.29%
 அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்இலங்கைத் தமிழரசுக் கட்சி[4]வீடு13,63448.71%
தகுதியான வாக்குகள்27,993100.00%
நிராகரிக்கப்பட்டவை181
மொத்த வாக்குகள்28,174
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்35,812
வாக்குவீதம்78.67%
மூடு

1977 தேர்தல்கள்

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:

மேலதிகத் தகவல்கள் வேட்பாளர், கட்சி ...
வேட்பாளர்கட்சிசின்னம்வாக்குகள்%
 தா. திருநாவுக்கரசுதமிழர் விடுதலைக் கூட்டணிசூரியன்23,38470.18%
ஆ. தியாகராஜாசுயேட்சைகுடை5,17615.53%
வி. ராட்டைகண்3,1879.56%
வி. இராஜசுந்தரம்தராசு8372.51%
என். இரத்தினசிங்கம்யானை4801.44%
வி. தருமலிங்கம்சுயேட்சைபூ1500.45%
எம். அம்பலவாணர்கப்பல்1070.32%
தகுதியான வாக்குகள்33,321100.00%
நிராகரிக்கப்பட்டவை135
மொத்த வாக்குகள்33,456
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்40,684
வாக்குவீதம்82.23%
மூடு

தா. திருநாவுக்கரசு 1982 ஆகத்து 1 இல் இறக்கவே, அவருக்குப் பதிலாக நீலன் திருச்செல்வம் 1983 மார்ச்சு 8 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் நியமிக்கப்பட்டார்.

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் நீலன் திருச்செல்வம் பருத்தித்துறை தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கைகயை இழந்தார்[11].

இவற்றையும் பார்க்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.