![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3f/Lipis_highlighted_in_Pahang%252C_Malaysia.svg/langta-640px-Lipis_highlighted_in_Pahang%252C_Malaysia.svg.png&w=640&q=50)
லிப்பிஸ் மாவட்டம்
மலேசியாவின் பகாங் மாநிலத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
லிப்பிஸ் மாவட்டம் (ஆங்கிலம்: Lipis District; மலாய்: Daerah Lipis; சீனம்: 立卑县; ஜாவி: ﻟﻴﭭﻴﺲ ); என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இதன் தலைப் பட்டணம் கோலா லிப்பிஸ். பகாங் மாநிலத்தில் வட மேற்கில் அமைந்து உள்ளது.
விரைவான உண்மைகள் லிப்பிஸ் மாவட்டம், நாடு ...
லிப்பிஸ் மாவட்டம் | |
---|---|
Lipis District | |
Daerah Lipis | |
![]() லிப்பிஸ் மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 4°15′N 101°50′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | லிப்பிஸ் |
தொகுதி | கோலா லிப்பிஸ் |
உள்ளூராட்சி | லிப்பிஸ் நகராண்மைக் கழகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,168 km2 (1,995 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,13,011 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 27xxx |
மலேசியத் தொலைபேசி | +6-09 |
மலேசியப் போக்குவரத்து எண் | C |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/68/Map_of_Lipis_District%2C_Pahang.svg/320px-Map_of_Lipis_District%2C_Pahang.svg.png)
பகாங் மாநிலத்தில் மிகப் பழமையான நகரங்களில் கோலா லிப்பிஸ் நகரமும் ஒன்றாகும். கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; குவாந்தான் நகரில் இருந்து 235 கி.மீ. தொலைவிலும் இந்த நகரம் உள்ளது.[2]
லிப்பிஸ் மாவட்டத்திற்கு மேற்கில் கேமரன் மலை, கிழக்கில் ஜெராண்டுட்; வடக்கில் ரவுப் ஆகிய நகரங்கள் உள்ளன. தவிர கிழக்கில் பேராக் மாநிலம்; வடக்கில் கிளாந்தான் மாநிலம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.