![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d3/Lal_Bahadur_Shastri_1966_stamp_of_India.jpg/640px-Lal_Bahadur_Shastri_1966_stamp_of_India.jpg&w=640&q=50)
லால் பகதூர் சாஸ்திரி
ஏழ்மையில் வாழ்ந்த மனிதர் / From Wikipedia, the free encyclopedia
லால் பகதூர் சாஸ்திரி (அக்டோபர் 2, 1904 - சனவரி 11, 1966) இந்திய குடியரசின் இரண்டாவது பிரதமர் ஆவார். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே மாதம் காலமானதைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பதவிக்கு வந்தார். இவர் முறையாகத் தெரிவு செய்யப்படும் வரை குல்சாரிலால் நந்தா 14 நாட்கள் இடைக்காலப் பிரதமராக இருந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.
விரைவான உண்மைகள் லால் பகதூர் சாஸ்திரிLal Bahadur Shastri, 3-ஆவது இந்தியப் பிரதமர் ...
லால் பகதூர் சாஸ்திரி Lal Bahadur Shastri | |
---|---|
![]() | |
3-ஆவது இந்தியப் பிரதமர் | |
பதவியில் 9 சூன் 1964 – 11 சனவரி 1966 | |
குடியரசுத் தலைவர் | சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் |
முன்னையவர் | ஜவஹர்லால் நேரு [lower-alpha 1] |
பின்னவர் | இந்திரா காந்தி [lower-alpha 2] |
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் | |
பதவியில் 9 சூன் 1964 – 18 சூலை 1964 | |
பிரதமர் | இவரே |
முன்னையவர் | குல்சாரிலால் நந்தா |
பின்னவர் | சுவரண் சிங் |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 4 ஏப்ரல் 1961 – 29 ஆகத்து 1963 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | கோவிந்த் வல்லப் பந்த் |
பின்னவர் | குல்சாரிலால் நந்தா |
ரெயில்வே அமைச்சர் | |
பதவியில் 1951–1956 | |
பிரதமர் | ஜவகர்லால் நேரு |
முன்னையவர் | என். கோபாலசாமி அய்யங்கார் |
பின்னவர் | ஜெகசீவன்ராம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1904-10-02)2 அக்டோபர் 1904 முகல்சராய், ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா (இன்றைய உத்தரப் பிரதேசம், இந்தியா) |
இறப்பு | 11 சனவரி 1966(1966-01-11) (அகவை 61) தாஷ்கந்து, சோவியத் ஒன்றியம் (இன்றைய உசுபெக்கிசுத்தான்) |
இளைப்பாறுமிடம் | ராஜ்காட் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | லலிதா சாஸ்திரி (16 மே 1928) |
பெற்றோர் | சர்தாபிரசாத் சிறீவஸ்தாவா (தந்தை) ராம் துலாரி தேவி (தாய்) |
முன்னாள் கல்லூரி | காந்தி காசி வித்யாபீத் |
தொழில் |
|
விருதுகள் | பாரத ரத்னா (1966) (இறப்பின் பின்னர்) |
குறிப்புகள்
| |
மூடு