From Wikipedia, the free encyclopedia
லவ்டேல் தொடருந்து நிலையம் (Lovedale railway station,நிலையக் குறியீடு:LOV) இந்தியாவின், தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள லவ்டேல் என்னும் இடத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். உதகமண்டலம் நகரத்திற்கு தெற்கே உள்ள லவ்டேல் என்ற பகுதியில் இந்த தொடருந்து நிலையம் இயங்குகிறது. 1908 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட நீலகிரி மலை இரயில் பாதையில் இடம்பெற்றுள்ள தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். குறிப்பிடத்தக்க சுற்றுலாத்தலமாகவும் லவ்டேல் தொடருந்து நிலையப் பகுதி கருதப்படுகிறது. இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும். ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் விரும்பி பயணித்து வந்து தங்குமிடமாகவும் இத்தளம் கருதப்படுகிறது. இது தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]
லவ்டேல் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11.3829°N 76.7047°E | ||||
ஏற்றம் | 2,211 மீட்டர்கள் (7,254 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து | ||||
நடைமேடை | 1 | ||||
இணைப்புக்கள் | பேருந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | LOV | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1908 | ||||
|
எண்: | தொடருந்து எண்: | புறப்படும் இடம் | சேரும் இடம் | தொடருந்து பெயர் |
---|---|---|---|---|
1. | 56136/56137 | மேட்டுப்பாளையம் | உதகமண்டலம் | பயணிகள் இரயில் |
2. | 56140/56141 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் இரயில் |
3. | 56142/56143 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் இரயில் |
4. | 56138/56139 | குன்னூர் | உதகமண்டலம் | பயணிகள் இரயில் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.