ரைட் சகோதரர்கள்
கண்டுபிடிப்பாளர்கள் / From Wikipedia, the free encyclopedia
ரைட் சகோதரர்கள் என்றழைக்கப்படும் (Wright brothers, ஓர்வில் ரைட் (19 ஆகத்து 1871 – 30 சனவரி 1948), வில்பர் ரைட் (16 ஏப்ரல் 1867 – 30 மே 1912), என்ற இருவரும் அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர்களும் விமானத்தைக் கண்டறிந்த முன்னோடிகளும் ஆவர்.[1][2][3] முதன்முதலில் டிசம்பர் 17, 1903 ஆம் ஆண்டில் பன்னிரெண்டு வினாடிகள் எஞ்சின் உந்தும் ஊர்தியில் பறந்து சாதனை படைத்தவர்கள். வட கரோலினாவின் கிட்டி ஹாக்கில் "ஓர்வில் ரைட்" 12 கு.வ. (H.P.) ஆற்றல் கொண்ட ரைட் பிளையர் எனும் பெட்ரோல் இயந்திரம் பூட்டிய வானூர்தியில் முதன் முதலாகப் பூமிக்கு மேல் 30 மைல்/மணி வேகத்தில் 12 வினாடிகள் 120 அடி தூரம் பறந்து புகழடைந்தார்.[4][5][6][7] 1904, 1905 ஆண்டுகளில் ரைட் சகோதரரின் பறக்கும் ஊர்தி பல முறையில் முற்போக்காகி மேன்மைப்படுத்தப்பட்டது.
ரைட் சகோதரர்கள் | |
---|---|
பிறப்பு | ஓர்வில் ரைட்: (1871-08-19)ஆகத்து 19, 1871
, டேட்டன், ஒகையோ |
இறப்பு | ஓர்வில் ரைட்: சனவரி 30, 1948(1948-01-30) (அகவை 76), Dayton வில்பர் ரைட்: மே 30, 1912(1912-05-30) (அகவை 45), டேட்டன், ஒகையோ |
இனம் | செருமனியர், டச்சு, ஆங்கிலேயர் |
பணி | ஓர்வில் ரைட்: பதிப்பாளர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/ விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர் வில்பர் ரைட்: இதழாசிரியர், மிதிவண்டி விற்பனையாளர் மற்றும் தயாரிப்பாளர், விமானக் கண்டுபிடிப்பாளர்/விமானத் தயாரிப்பாளர், விமான ஓட்டி/பயிற்சியாளர் |
வாழ்க்கைத் துணை | இல்லை (both) |