![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/da/Naya_Raipur_Capitol_complex_road.png/640px-Naya_Raipur_Capitol_complex_road.png&w=640&q=50)
ராய்ப்பூர், சத்தீஸ்கர்
From Wikipedia, the free encyclopedia
ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். 2001-ம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087.[2] இதனருகில் புதிய தலைநகரான நயா ராய்ப்பூர் கட்டப்பட்டுவருகிறது.
விரைவான உண்மைகள் ராய்ப்பூர், நாடு ...
ராய்ப்பூர் | |
---|---|
மேலிருந்து, இடமிருந்து வலமாக: கரன்சி டவர், ஜிஇ சாலை; நகர்-காரி மணிக்கூண்டு; நயா ராய்பூர் விரைவுச்சாலை; இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ராய்ப்பூர்] பிரிவு 19, நயா ராய்பூர்; சுவாமி விவேகானந்தர் விமான நிலையம்; மால் காந்தம் ; ராம் மந்திர் ராய்பூர்; CBD பகுதி ராய்ப்பூர்; ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம்; இன்டர் ஸ்டேட் பஸ் டெர்மினல், ராய்ப்பூர் | |
ஆள்கூறுகள்: 21.25°N 81.63°E / 21.25; 81.63 | |
நாடு | ![]() |
பகுதி | மத்திய இந்தியா |
மாநிலம் | ![]() |
பகுதி | ராய்ப்பூர் |
மாவட்டம் | ராய்ப்பூர் |
அரசு | |
• மாநகராட்சி மேயர் | ஐஜாஸ் தேபார் |
• மாவட்ட ஆட்சியர் | சர்வேஷ்வர் புரே, இ.ஆ.ப |
பரப்பளவு | |
• பெருநகரம் | 226 km2 (87 sq mi) |
ஏற்றம் | 298.15 m (978.18 ft) |
மக்கள்தொகை | |
• பெருநகரம் | 10,10,087 |
• அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 11,22,555 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 492001-22, 493111-211 (ராய்ப்பூர்)[4] |
தொலைபேசி | +91 |
வாகனப் பதிவு | CG-04 |
இணையதளம் | www |
மூடு