![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d2/Rajnath.jpg/640px-Rajnath.jpg&w=640&q=50)
ராஜ்நாத் சிங்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
ராஜ்நாத் சிங் (பிறப்பு: சூலை 10, 1951, வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா) முன்னணி இந்திய அரசியல்வாதியும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள்[1] தலைவரும் இந்தியாவின் இராணுவ அமைச்சரும் ஆவார். இவர் பாஜகவின் இளைஞர் அணித் தலைவராகவும், பின் அவரது சொந்த மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் துவக்கத்தில் இயற்பியல் பேராசிரியராக இருந்தார். இவர் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் தனது நீண்ட காலத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஜனதா கட்சியில் ஈடுபட்டார். அதனால் அவர் உத்தரப் பிரதேசத்தில் எண்ணற்ற பதவிகளைப் பெறுவது எளிதானது.
விரைவான உண்மைகள் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா) ...
ராஜ்நாத் சிங் | |
---|---|
![]() | |
பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 31 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | நிர்மலா சீதாராமன் |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 26 மே 2014 – 30 மே 2019 | |
பிரதமர் | நரேந்திர மோதி |
முன்னையவர் | சுஷில் குமார் ஷிண்டே |
பின்னவர் | அமித் சா |
பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் | |
பதவியில் 23 ஜனவரி 2013 – 26 மே 2014 | |
முன்னையவர் | நிதின் கட்காரி |
பின்னவர் | அமித் சா |
பதவியில் 24 திசம்பர் 2005 – 24 திசம்பர் 2009 | |
முன்னையவர் | எல். கே. அத்வானி |
பின்னவர் | நிதின் கட்காரி |
உத்திர பிரதேச முதலமைச்சர் | |
பதவியில் 28 அக்டோபர் 2000 – 8 மார்ச் 2002 | |
ஆளுநர் | சுராஜ் பன், விஷ்னு காந்த் சாஷ்திரி |
முன்னையவர் | இராம் பிரகாசு குப்தா |
பின்னவர் | மாயாவதி |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 10 சூலை 1951 (1951-07-10) (அகவை 72) உத்திரப் பிரதேசம், இந்தியா ![]() |
அரசியல் கட்சி | பாரதீய ஜனதா கட்சி |
துணைவர் | சாவித்ரி சிங் |
பிள்ளைகள் | 2 மகன்கள் 1 மகள் |
முன்னாள் கல்லூரி | தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | Official website |
மூடு