யுவான் அல்மெய்டா
From Wikipedia, the free encyclopedia
யுவான் அல்மெய்டா பொஸ்க் (Juan Almeida Bosque, பெப்ரவரி 17, 1927 – செப்டம்பர் 11, 2009[1]) என்பவர் கியூபாவின் அரசியல்வாதியும் 50களில் இடம்பெற்ற கியூபா புரட்சியின் முக்கியமான ஆரம்பகட்டத் தலைவர்களில் ஒருவரும் ஆவார். புரட்சியின் பின்னர் இவர் கியூபா பொதுவுடமைக் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்து வந்தார். 2009 இல் அவர் இறக்கும் போது கியூபாவின் துணை அதிபராக இருந்தார்.
விரைவான உண்மைகள் யுவான் அலெமெய்டாJuan Almeida, பிறப்பு ...
யுவான் அலெமெய்டா Juan Almeida | |
---|---|
![]() | |
பிறப்பு | (1927-02-17)பெப்ரவரி 17, 1927 அவானா, கியூபா |
இறப்பு | செப்டம்பர் 11, 2009(2009-09-11) (அகவை 82) அவானா, கியூபா |
மூடு
பிடல் காஸ்ட்ரோ மற்றும் ராவுல் காஸ்ட்ரோவுடன் இணைந்து புரட்சியின் ஆரம்பகாலங்களின் போது போராடியிருந்தார். இந்த போராட்டத்தின் முடிவாக ஃபல்கேன்சியோ பாட்டிஸ்டாவின் அரசாங்கம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியில் தூக்கி எறியப்பட்டது.
அவானாவைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூவான் அல்மெய்தா, புரட்சியாளர்கள் தலைமை பீடத்தில் இருந்த ஒரே கறுப்பினத்தவர் ஆவார்.