மணிரத்னம் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
மௌன ராகம் (Mouna Ragam) பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும்.[1]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி), தனது காதலன் கார்த்திக்கை இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரிடமிருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார். அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார். நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒன்றாக வாழ்கின்றனர். இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[2][3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்கள் | நீளம் | |||||||
1. | "ஓகோ மேகம் வந்ததோ" | எஸ். ஜானகி | 4:25 | |||||||
2. | "நிலாவே வா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:36 | |||||||
3. | "சின்ன சின்ன வண்ணக்குயில்" | எஸ். ஜானகி | 4:24 | |||||||
4. | "பனிவிழும் இரவு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:32 | |||||||
5. | "மன்றம் வந்த தென்றலுக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:46 |
வருது[lower-alpha 1] | நிகழ்வின் நாள்[lower-alpha 2] | பிரிவு | பெறுநர் | முடிவு | Ref. |
---|---|---|---|---|---|
பொம்மை நாகி ரெட்டி விருதுகள் | ஜூலை 1987 | பொம்மை நாகிரட்டி விருதுகள் | மணிரத்னம் | வெற்றி | [4] |
சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் | ஏழாவது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் | சிறந்த இயக்குனருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருது | மணிரத்னம் | வெற்றி | [5] |
தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் | 9 ஆகஸ்ட் 1987 | சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருது – தமிழ் | மணிரத்னம் | வெற்றி | [6] |
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா | 29 செப்டம்பர் 1987 | சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது | ஜி. வெங்கடேஸ்வரன் (திரைப்பட தயாரிப்பாளர்) | வெற்றி | [7] |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.