From Wikipedia, the free encyclopedia
மொட்டுமுனைத் தோல் (foreskin) ஆண்குறி மொட்டினை மூடியுள்ள தோல் மடிப்புகள் ஆகும். இஃது ஆண்குறி விறைப்பாக இல்லாதபோது ஆண்குறி மொட்டைப் பாதுகாக்கிறது. பெரும்பாலான பாலூட்டிகளுக்கு மொட்டுமுனைத் தோல் உள்ளது.
மொட்டுமுனைத் தோல் | |
---|---|
ஆண்குறி மொட்டினை மூடியுள்ள மொட்டுமுனைத் தோலுடன் கூடிய ஆண்குறி. | |
இலத்தீன் | prepucium, præputium |
கிரேயின் | |
தமனி | Dorsal artery of the penis |
சிரை | Superficial dorsal vein of the penis |
நரம்பு | Dorsal nerve of the penis |
முன்னோடி | Genital tubercle, Urogenital folds |
ம.பா.தலைப்பு | Foreskin |
மொட்டுமுனைத் தோலின் வெளிப்பகுதி வழைமையான தோல் போன்றதே; ஆனால் முனைத்தோலின் உட்புறம் கண் இமை அல்லது வாய்த் தோலின் உட்பகுதிகளைப் போல மென்தோல் ஆக உள்ளது. மொட்டுமுனைத் தோல் ஆண்குறியுடன் கடிவாளத் திசுக்களால் பிணைக்கப்பட்டுள்ளதால் நகர முடியும். தசைகளுக்கு மீள்திறன் உள்ளது.[1] ஆண்குறியின் மிகவும் உணர்திறனுடைய ஐந்து இடங்கள் முன்தோலில் உள்ளன.[2]
மொட்டுமுனைத் தோல் மொட்டை ஈரமாக வைத்திருக்கவும் பாதுகாக்கவும் பாலுறவின்போது பல நரம்புத்தொகுதிகள் உள்ளதால் இன்பத்தை கூட்டவும் பயனாவதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.[3]
இருப்பினும், மோசசு மற்றும் பெய்லி (1998) "மொட்டு முனைத்தோல் ஆணின் பால்வினை இன்பத்தைக் கூட்டுவதாக தெரியக் காட்டவில்லை " எனக் கூறுகின்றனர்.[4]
விருத்த சேதனம் என்பது மொட்டுமுனைத் தோலை மத சடங்குகளுக்காக அல்லது அறுவை சிகிட்சை மூலம் நீக்குவதாகும். இவ்வாறு முனைத்தோலை நீக்குவதால் சில நோய்களைத் தவிர்க்கலாம் என்ற கருத்தும் உள்ளது; ஆனால் இத்தகைய பயன் மிகவும் குறைவானதாக பல மருத்துவ சங்கங்கள் நம்புகின்றன. ஒய்யாரத்திற்காக சில நேரங்களில் முன்தோலில் துளை இடுவதும் பிளவுபடுத்துவதும் உண்டு.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.