மேரி மலான்
From Wikipedia, the free encyclopedia
டைஃபாய்டு மேரி (Typhoid Mary) என அழைக்கப்பட்ட மேரி மலான் (Mary Mallon, செப்டம்பர் 23, 1869 - நவம்பர் 11, 1938) என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் டைஃபாய்டு எனப்படும் குடற்காய்ச்சலுக்குக் காரணமான நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களை தன்னுடன் சுமந்து வந்து பிறருக்குப் பரப்பும் '"அறிகுறிகளற்ற நோய்க்காவியாக" கண்டறியப்பட்ட முதல் நபர் ஆவார். இவர் சமையல்காரியாகப் பணியாற்றியபோது 51 மனிதர்களுக்கு குடற்காய்ச்சல் நோய் பரவக்காரணமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டுள்ளார். இவர்களில் மூவர் இறந்துவிட்டனர்.[1] மக்கள் நலவாழ்வு அதிகாரிகள் இவரை இருமுறை கட்டாயப்படுத்தித் தனிமையில் வைத்திருந்தனர். கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் தனிமையில் வைக்கப்பட்ட பின்னர் இவர் உயிரிழந்தார்.
விரைவான உண்மைகள் மேரி மலான்Mary Mallon, பிறப்பு ...
மேரி மலான் Mary Mallon | |
---|---|
![]() தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் மேரி | |
பிறப்பு | (1869-09-23)செப்டம்பர் 23, 1869 குகுசுடவுன், டைரோன் கவுன்டி, அயர்லாந்து |
இறப்பு | நவம்பர் 11, 1938(1938-11-11) (அகவை 69) நோர்த் பிரதர் தீவு, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பிற்கான காரணம் | நுரையீரல் அழற்சி |
கல்லறை | புனித ரேமன்ட் இடுகாடு |
இருப்பிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | பிறப்பால் ஐரியர்; அமெரிக்கர் |
மற்ற பெயர்கள் | மேரி பிறவுன் |
இனம் | ஐரியர் |
பணி | சமையற்காரர் |
அறியப்படுவது | குடற்காய்ச்சலின் அறிகுறிகளற்ற நோய்க்காவி |
மூடு