![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/68/Magellan_-_artist_depiction.png/640px-Magellan_-_artist_depiction.png&w=640&q=50)
மெகல்லன் விண்ணுளவி
From Wikipedia, the free encyclopedia
மெகல்லன் விண்ணுளவி (Magellan) அல்லது வெள்ளி மெகல்லன் துருவி என்பது நாசாவால், 1989 மே 4 அன்று அனுப்பப்பட்ட 1,035 கி.கி எடையுடைய ஒரு இயந்திர விண்ணுளவி ஆகும். இந்த விண்ணுளவியின் நோக்கம் வெள்ளி கோளின் மேற்பரப்பு மற்றும் ஈர்ப்புப் புலத்தை பற்றி அறிவது ஆகும்.
விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...
![]() மெகல்லன் விண்ணுளவி, வெள்ளிக் கோளை சுற்றி வருவது போன்ற கற்பனைப் படம். | |
திட்ட வகை | வெள்ளி சுற்றுக்கலன் |
---|---|
இயக்குபவர் | நாசா |
காஸ்பார் குறியீடு | 1989-033பி |
இணையதளம் | www2 |
திட்டக் காலம் | நான்கு ஆண்டுகள், இரண்டு மாதங்கள் |
விண்கலத்தின் பண்புகள் | |
தயாரிப்பு | மார்ட்டின் மேரியெட்டா ஜியூசு வானூர்தி |
ஏவல் திணிவு | 1,035 கிகி (2,282 இறா) |
திறன் | ஏறத்தாழ 1,030 வாட்டு |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | மே 4, 1989, 18:47:00 ஒசநே |
ஏவுகலன் | விண்ணோடம் அட்லாண்டிசு எஸ்டிஎஸ்-30 / ஐயூஎஸ் |
ஏவலிடம் | கென்னடி விண்வெளி மையம் |
திட்ட முடிவு | |
கழிவு அகற்றம் | வெள்ளியின் வளிமண்டலத்தில் எரிந்து விட்டது. |
தேய்வு நாள் | அக்டோபர் 13, 1994 |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | Cytherocentric |
வெள்ளி சுற்றுக்கலன் | |
சுற்றுப்பாதையில் இணைதல் | ஆகஸ்ட் 10, 1990, 17:00:00 ஒ.ச.நே |
மூடு
மெகல்லன் விண்ணுளவி தான் முதன் முதலில் விண்ணோடத்திலிருந்து அனுப்பப்பட்ட விண்ணுளவி ஆகும்.மேலும் இது தனது சுற்றுப்பாதையில் வலம் வரும் போது வளிமண்டலக் கலநிறுத்தம் (aerobraking) முதன் முதலில் பரிசோதிக்கப்பட்டதும் இந்த விண்ணுளவியில் தான்.இது நாசாவால் வெள்ளி கோளுக்கு விண் பொருள்களை அனுப்பும் பணிகளில் நான்காவது வெற்றிகரமான பணி ஆகும். மேலும் இது அமெரிக்கா வேற்று கோள்களுக்கு விண்ணுளவிகளை அனுப்பாமல் இருந்த 11 ஆண்டு கால இடைவெளியை முடிவுக்கு கொண்டுவந்தது.