From Wikipedia, the free encyclopedia
முர்லன் தேசியப் பூங்கா இந்திய மாநிலமான மிசோரத்தின் சம்பாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த பூங்கா கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது அய்சாலில் இருந்து 245 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்காவின் தெற்கில் லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[2] இங்கு 25 வகையான பாலூட்டி இனங்களும், 150 வகையான பறவைகளும், 35 வகையான மருந்துச் செடிகளும், மூங்கில், ஆர்க்கிட் செடிகளும் உள்ளன.[3]
முர்லன் தேசியப் பூங்கா Murlen National Park | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | மியான்மர் எல்லைக்கு அருகில் சம்பாய் மாவட்டத்தில் உள்ள பூங்காவின் அமைவிடம் |
ஆள்கூறுகள் | 23°37′01″N 93°18′00″E |
பரப்பளவு | 200 km2 (77 sq mi) |
நிறுவப்பட்டது | 1991 |
இந்த இடம் 1991ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[4]
காட்டிற்குள் சூரிய ஒளி புக முடியாத காரணத்தினால், இந்த பகுதிக்கு திரும்பி வர முடியாத இடம் என்ற பெயர் உண்டு.[5] இங்குகருவாலி மரம், சண்பகம், ஆர்க்கிட் உள்ளிட்ட செடி வகைகள் உள்ளன.
இங்கு புலி, சிறுத்தை, கடமான், மான், அணில், கருங்கரடி, ஹுலக் கிப்பான், செம்முகக் குரங்கு, மலை மைனா உள்ளிட்ட பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.