மீத்தேன்டையால்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மீத்தேன்டையால் (methanediol) என்பது CH2(OH)2 என்ற மூலக்கூற்று வாய்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். இது பார்மால்டிகைடு ஓரைதரேட்டு (formaldehyde monohydrate) அல்லது மெத்திலீன் கிளைக்கால் (methylene glycol) என்றும் அழைக்கப்படுகிறது. பார்மால்டிகைடை அடுத்து அறியப்படும் எளிமையான கார்போவைதரேட்டுச் சேர்மம் இதுவாகும்.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
மீத்தேன்டையால்[1] | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
463-57-0 | |||
Abbreviations | MADOL | ||
Beilstein Reference |
1730798 | ||
ChEBI | CHEBI:48397 | ||
ChemSpider | 71348 | ||
EC number | 207-339-5 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 79015 | ||
| |||
பண்புகள் | |||
CH4O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 48.04 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
அடர்த்தி | 1.199 g cm−3 | ||
கொதிநிலை | 194 °C (381 °F; 467 K) at 101 kPa | ||
ஆவியமுக்கம் | 16.1 Pa | ||
காடித்தன்மை எண் (pKa) | 13.29[2] | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.401 | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 99.753 °C (211.555 °F; 372.903 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
பார்மால்டிகைடை நீரேற்ற வினைக்கு உட்படுத்தும் போது உடன் விளைபொருளாகத் தோன்றும் மீத்தேன் டையால் தண்ணீரில் மேம்பட்டிருக்கிறது. இங்கு சமநிலை மாறிலியின் மதிப்பு 103 ஆகும்.[3] மற்றும் 5 சதவீத எடையளவு பார்மால்டிகைடுள்ள நீர்க்கரைசலில் 80 சதவீத பார்மால்டிகைடு மீத்தேன் டையால் வடிவிலேயே உள்ளது.
இச்சேர்மம் வானியல்வேதியியலுடன் தொடர்பு கொண்ட சேர்மமாக இருக்கிறது.[4].
பிரேசில் நாட்டில் பயன்படும் முடி நிமிர்த்தும் வேதிப்பொருளில் முக்கிய அங்கமாக மீத்தேன் டையால் இருப்பதாக அமெரிக்கா பட்டியலிட்டுள்ளது, பார்மால்டிகைடுடன் இச்சேர்மம் கொண்டுள்ள சமநிலை காரணாமாக உடல்நலத்திற்கு தீங்குண்டாகவும் வாய்ப்புகள் உண்டு.[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.