மிசோரம்
இந்திய மாநிலம் / From Wikipedia, the free encyclopedia
மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகாரப்பூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 91.33%. கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 1,097,206 . இந்த மாநிலத்தை திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்துள்ளன. இந்த மாநிலம் வங்காளதேசம், மியான்மர் ஆகிய நாடுகளுடன் சுமார் 722 கி.மீ நீளத்துக்கு எல்லையை கொண்டுள்ளது. நாட்டின் 2 வது குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். மிசோரம் சுமார் 21,081 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. மாநிலத்தில் சுமார் 91% காடுகள் உள்ளன.
விரைவான உண்மைகள் மிசோரம், நாடு ...
மிசோரம் | |
---|---|
சின்னம் | |
இந்தியாவில் மிசோராம் காட்டும் படம் | |
நாடு | இந்தியா |
பகுதி | வடகிழக்கு இந்தியா |
ஒன்றியப் பகுதி | 21 சனவரி 1972 |
மாநிலம் | 20 பெப்பிரவரி 1987† |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | அய்சால் |
மாவட்டம் | 11 |
அரசு | |
• நிர்வாகம் | மிசோரம் அரசு |
• ஆளுனர்[1] | ஹரி பாபு கம்பம்பதி |
• முதலமைச்சர்[2] | சோரம்தாங்கா (மிசோ தேசிய முன்னணி) |
• சட்டவாக்கம்[3] | மிசோரம் சட்டமன்றம் ஓரவை (40 உறுப்பினர்கள்) |
• மக்களவைத் தொகுதி | 1 |
• உயர்நீதிமன்றம் | குவஹாத்தி உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 21,081 km2 (8,139 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 24வது |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 10,91,014 |
• தரவரிசை | 27வது |
• அடர்த்தி | 52/km2 (130/sq mi) |
மொழி | |
• அலுவல்மொழி | மிசோ மொழி[4], ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+05:30 (IST) |
தொலைபேசி | +91 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-MZ |
வாகனப் பதிவு | MZ |
HDI | 0.790 (medium) |
மனித வளர்ச்சிக் குறியீடு அடிப்படையில் தரவரிசை | இரண்டாவது (2005) |
இந்தியாவில் கல்வியறிவு | 89.9% (இரண்டாவது) |
இணையதளம் | mizoram |
சின்னங்கள் | |
சின்னம் | மிசோரம் அரசு சின்னம் |
விலங்கு | இமயமலை செரோ (காப்ரிகார்னிசு தார்) |
பறவை | திருமதி குயூமின் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி (சிர்மாட்டிகசு ஹுமியா) |
மீன் | பர்மிய கிங்ஃபிஷ் (நாகவாங்) (செமிபிளோட்டஸ் மாடஸ்டஸ்) |
மலர் | ரெட் வந்தா (ரெனாந்தெரா இம்ஸ்கூட்டியானா) |
மரம் | நாகமரம் (மெசுவா ஃபெரியா) |
†இது மிசோரம் மாநில சட்டம், 1986 மூலம் முழு மாநிலமாக உயர்த்தப்பட்டது |
மூடு