![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a6/Machap.jpg/640px-Machap.jpg&w=640&q=50)
மாச்சாப்
ஜொகூர், குளுவாங்கில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
மாச்சாப் (மலாய்: Machap; ஆங்கிலம்: Machap; சீனம்: 马什) என்பது மலேசியா, ஜொகூர், குளுவாங் மாவட்டத்தில், குளுவாங் நகரத்திற்கு தெற்கே அமைந்துள்ள ஒரு நகரமாகும். மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தென்பகுதியில் பயணிப்பவர்களுக்கு இந்த நகரம் நன்கு அறிமுகமான நகரமாக விளங்குகிறது.
- மலாக்கா மாநிலத்தில் மாச்சாப் பாரு எனும் பெயரில் ஒரு நகரம் உள்ளது.
மாச்சாப் | |
---|---|
Machap | |
![]() | |
![]() மாச்சாப் நகரம் | |
ஆள்கூறுகள்: 1°52′N 103°15′E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | ![]() |
பரப்பளவு | |
• மொத்தம் | 118 km2 (46 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,317 |
• அடர்த்தி | 45/km2 (120/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 86000[2] |
போக்குவரத்து பதிவெண்கள் | J |
சிம்பாங் ரெங்கம் நகர மையத்திலிருந்து வடமேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது. மச்சாப் என்பது பழைய கிராமத்தின் பெயர். புதிய கிராமம் கம்போங் பாரு மாச்சாப் என்று அழைக்கப்படுகிறது.
மலாக்காவில் மாச்சாப் எனும் பெயரில் ஒரு நகரம் இருந்தாலும் அதனை மாச்சாப் பாரு என்று அழைக்கிறார்கள். பொதுவாக மலாக்கா மாச்சாப் என்றும் ஜொகூர் மாச்சாப் என்றும் அழைப்பது வழக்கமாகிவிட்டது.
இந்த இடம் முக்கியமாக அதன் நீர்த்தேக்கமான மாச்சாப் நீர்த்தேக்கத்திற்காக அறியப்படுகிறது. மாச்சாப் நீர்த்தேக்கத்திற்கு அருகில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒரு பொழுதுபோக்கு பகுதியும் உருவாக்கப்பட்டுள்ளது.[3]