![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Datuk_Seri_Mohamad_Sabu_%2528cropped%2529.jpg/640px-Datuk_Seri_Mohamad_Sabu_%2528cropped%2529.jpg&w=640&q=50)
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Agriculture and Food Security; மலாய்: Menteri Pertanian dan Keterjaminan Makanan Malaysia) என்பவர் மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராக உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.[1]
விரைவான உண்மைகள் மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர்Minister of Agriculture and Food Security of Malaysia Menteri Pertanian dan Keterjaminan Makanan Malaysia, சுருக்கம் ...
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சர் Minister of Agriculture and Food Security of Malaysia Menteri Pertanian dan Keterjaminan Makanan Malaysia | |
---|---|
![]() | |
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு | |
சுருக்கம் | MAFS/KPKM |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜாயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 (1955) |
முதலாமவர் | அப்துல் அசீஸ் இசாக் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் |
இணையதளம் | www |
மூடு
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அமைச்சு வேளாண் சார்ந்த தொழில், வேளாண்மை, கால்நடை, விலங்கு நலன், மீன்பிடி, தொற்றுக்காப்பு, ஆய்வு, வேளாண் ஆராய்ச்சி, வேளாண் வளர்ச்சி, விவசாய சந்தைப்படுத்தல், அன்னாசி தொழில், வேளாண் தொழில், தாவரவியல் பூங்கா, உணவு பாதுகாப்பு, உணவு இறையாண்மை அமைப்புகளுக்குப் பொறுப்பாகும்.