மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Entrepreneur and Cooperatives Development; மலாய்: Menteri Pembangunan Usahawan Dan Koperasi Malaysia) என்பவர் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார்.
விரைவான உண்மைகள் மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் Minister of Entrepreneur and Cooperatives Development Menteri Pembangunan Usahawan Dan Koperasi Malaysia, சுருக்கம் ...
மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் Minister of Entrepreneur and Cooperatives Development Menteri Pembangunan Usahawan Dan Koperasi Malaysia | |
---|---|
தற்போது இவோன் பெனடிக் (Ewon Benedick) திசம்பர் 3, 2022 (2022-12-03) முதல் | |
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு | |
சுருக்கம் | KUSKOP/MEDC |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1974 (1974) |
முதலாமவர் | உசேன் ஓன் (Hussein Onn) (பொது நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைச்சர்) |
இணையதளம் | www.kuskop.gov.my |
மூடு
மலேசிய தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர், மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்குத் துணை அமைச்சர் ஒருவர் உதவியாக உள்ளார். இந்த அமைச்சர் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் மூலமாகத் தன் அமைச்சை நிர்வகித்து வருகிறார்.
தற்போது இவோன் பெனடிக் (Ewon Benedick) என்பவர் 3 டிசம்பர் 2022 தொடங்கி அமைச்சராகப் பொறுப்பு வகிக்கிறார்.