மலேசிய தேசிய பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய தேசிய பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Kebangsaan Malaysia; ஆங்கிலம்:National University of Malaysia என்பது மலேசியா, சிலாங்கூர், உலு லங்காட் மாவட்டம், பண்டார் பாரு பாங்கி நகரில் உள்ள ஒரு முதன்மையான பொது ஆய்வு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகும். அதன் கல்வி மருத்துவமனையான மலேசிய தேசிய பல்கலைக்கழக மருத்துவ மையம் (Universiti Kebangsaan Malaysia Medical Centre) (UKMMC) செராஸ் நகரிலும்; கிளை வளாகம் கோலாலம்பூர் மாநகரிலும் அமைந்துள்ளன.
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை | |
குறிக்கோளுரை | அறிவு, தரம், நல்லொழுக்கம் (மலாய்: Ilmu, Mutu dan Budi) (Knowledge, Quality and Virtue) |
---|---|
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் (ஆய்வுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 18 மே 1970 |
வேந்தர் | நெகிரி செம்பிலான் துவாங்கு முகிரிஸ் |
மாணவர்கள் | 28,776 (2020)[1] |
பட்ட மாணவர்கள் | 235,562 (2023) [1] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 256,982 (2022) [1] |
அமைவிடம் | Lingkungan Ilmu, 43600 Bangi, Selangor, Malaysia , , , 02°55′30″N 101°46′53″E |
சேர்ப்பு | ACU, ASAIHL, AUN, AUAP,[2] UAiTED |
இணையதளம் | www |
இந்தப் பல்கலைக்கழகம், 1970-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதில் இருந்து, இதுவரையில் 170,500 இளங்கலை மாணவர்கள்; 90,105 முதுகலை மாணவர்களுக்கு உயர்க்கல்வி வழங்கியுள்ளது. இங்கு பயின்ற மாணவர்களில் 35 நாடுகளைச் சேர்ந்த .40,368 வெளிநாட்டு மாணவர்களும் அடங்குவர். பல்கலைக்கழகத்தின் பயிற்றுவிக்கும் மொழியாக ஆங்கில மொழிக்கு பதிலாக மலாய் மொழி பயன்படுத்தப்படுகிறது.[3]