![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Coat_of_arms_of_Malaysia.svg/langta-640px-Coat_of_arms_of_Malaysia.svg.png&w=640&q=50)
மலேசிய கல்வி அமைச்சு
From Wikipedia, the free encyclopedia
மலேசிய கல்வி அமைச்சு (மலாய்: Kementerian Pendidikan Malaysia; ஆங்கிலம்: Ministry of Education Malaysia) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சின் தலைமையகம் புத்ராஜெயா (Putrajaya) மத்திய அரசாங்க நிர்வாக மையத்தில் (Federal Government Administrative Centre) உள்ளது.
Kementerian Pendidikan Malaysia Ministry of Education Malaysia KPM / MoE | |
![]() | |
![]() | |
![]() மலேசிய கல்வித் துறை அமைச்சகம் புத்ராஜெயா | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1955 (69 ஆண்டுகளுக்கு முன்னர்) (1955) |
முன்னிருந்த அமைப்புகள் |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | Block E8, Parcel E, Federal Government Administrative Centre, 62604 புத்ராஜாயா 02°56′36.14″N 101°42′31.7″E |
பணியாட்கள் | 549,159 (2018) |
ஆண்டு நிதி | MYR 64,122,868,300 (2022 - 2023)[1] |
அமைச்சர் |
|
துணை அமைச்சர் |
|
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | www முகநூலில் மலேசிய கல்வி அமைச்சு |
இந்த அமைச்சு, மலேசியாவின் கல்வித் துறை சார்ந்த அனைத்து அமைப்புகளுக்கும்; செயல் பாடுகளுக்கும் பொறுப்பு வகிக்கும் முதன்மை அரசாங்க அமைப்பாகச் செயல் படுகின்றது. அத்துடன் கல்வி சார்ந்த அனைத்துக் கொள்கைகளையும் நிர்வகித்துப் பராமரிக்கும் பொறுப்புகளையும் கொண்டுள்ளது.
மலேசியாவின் 23-ஆவது அமைச்சரவை 2022 டிசம்பர் 2-ஆம் தேதி, அறிவிக்கப்பட்டது. மலேசியக் கல்வி அமைச்சராக பாட்லினா சீடேக் (Fadhlina Sidek) என்பவர் நியமிக்கப்பட்டார். மறுநாள் 2022 டிசம்பர் 3-ஆம் தேதி, 28 அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.[3]