மலேசிய கல்வி அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய கல்வி அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Education Malaysia; மலாய்: Menteri Pendidikan Malaysia) என்பவர் மலேசிய கல்வி அமைச்சின் தலைமைப் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்குத் துணை அமைச்சர்கள் இருவர் உதவியாக உள்ளனர். மலேசிய கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் மூலமாகத் தன் அமைச்சை நிர்வகித்து வருகிறார்.
விரைவான உண்மைகள் மலேசிய கல்வி அமைச்சர்Minister of Education Menteri Pendidikan Malaysia, சுருக்கம் ...
மலேசிய கல்வி அமைச்சர் Minister of Education Menteri Pendidikan Malaysia | |
---|---|
மலேசிய கல்வி அமைச்சு | |
சுருக்கம் | KPM / MOE |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1955 (1955) |
முதலாமவர் | அப்துல் ரசாக் உசேன் |
இணையதளம் | www |
மூடு
வரலாற்று அடிப்படையில், மலேசிய கல்வி அமைச்சர் பதவி என்பது எதிர்கால மலேசியப் பிரதமர் பதவிக்கு ஒரு படிக்கல் என்று அறியப்படுகிறது. மலேசியாவின் முதலாவது பிரதமர் துங்கு அப்துல் ரகுமான்; மற்றும் ஒன்பதாவது பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் ஆகியோரைத் தவிர மற்ற அனைத்து மலேசியப் பிரதமர்களும் இந்தப் பதவியை வகித்துள்ளனர்.