![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/26/Coat_of_arms_of_Malaysia.svg/langta-640px-Coat_of_arms_of_Malaysia.svg.png&w=640&q=50)
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர்
From Wikipedia, the free encyclopedia
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Domestic Trade and Costs of Living of Malaysia; மலாய்: Menteri Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup) என்பவர் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.
விரைவான உண்மைகள் மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர்Minister of Domestic Trade and Costs of Living of Malaysia Menteri Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup, சுருக்கம் ...
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சர் Minister of Domestic Trade and Costs of Living of Malaysia Menteri Perdagangan Dalam Negeri dan Kos Sara Hidup | |
---|---|
![]() | |
தற்போது அர்மிசான் முகமது அலி (Armizan Mohd Ali) 30 சூலை 2023 முதல் | |
மலேசிய உள்நாட்டு வணிகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துறை அமைச்சு | |
சுருக்கம் | KPDN |
உறுப்பினர் | மலேசிய அமைச்சரவை |
அறிக்கைகள் | மலேசிய நாடாளுமன்றம் |
அலுவலகம் | புத்ராஜெயா |
நியமிப்பவர் | மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை) |
உருவாக்கம் | 1990 (1990) |
முதலாமவர் | சுலைமான் தாவூத் (உள்நாட்டு வணிகம் மற்றும் நுகர்வோர் துறை அமைச்சர்) |
இணையதளம் | www |
மூடு
மலேசியாவின் உள்நாட்டு வணிகம் தொடர்பான நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் இந்த அமைச்சு; மக்களின் வாழ்க்கைச் செலவுகள் தொடர்பான செயல்பாடுகளிலும் கவனம் செலுத்தி வருகிறது. அண்மைய காலங்களில், வாழ்க்கைச் செலவுகள் குறித்து பொதுமக்களின் புகார்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் செயல்பாடுகளிலும் இந்த அமைச்சு முனைப்பு காட்டி வருகிறது.