![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/67/Mahathir_1984_%2528cropped%2529.jpg/640px-Mahathir_1984_%2528cropped%2529.jpg&w=640&q=50)
மலேசியப் பொதுத் தேர்தல், 1986
From Wikipedia, the free encyclopedia
மலேசியப் பொதுத் தேர்தல், 1986 (1986 Malaysian General Election; மலாய்: Pilihan raya umum Malaysia 1986;) என்பது 1986 ஆகஸ்டு 2 - 3-ஆம் தேதிகளில், மலேசியாவில் நடைபெற்ற 7-ஆவது பொது தேர்தலைக் குறிப்பிடுவதாகும். மலேசியாவின் அப்போதைய 177 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
விரைவான உண்மைகள் மலேசிய மக்களவையின் 177 இடங்கள் அதிகபட்சமாக 89 தொகுதிகள் தேவைப்படுகிறது, பதிவு செய்தோர் ...
![]() | |||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
மலேசிய மக்களவையின் 177 இடங்கள் அதிகபட்சமாக 89 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பதிவு செய்தோர் | 6,791,446 | ||||||||||||||||||||||||||||||||||||||||
வாக்களித்தோர் | 69.97% | ||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||
|
மூடு
ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மக்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுத்தது. அதே நாட்களில் மலேசியாவின் 11 மாநிலங்களில் உள்ள 351 மாநில சட்டமன்றத் தொகுதிகளிலும் மலேசிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்களும் நடைபெற்றன. சபா, சரவாக் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவில்லை.
இந்தத் தேர்தலில் அம்னோ தலைமையிலான பாரிசான் நேசனல் கூட்டணி, மொத்த 177 இடங்களில் 148 இடங்களை வென்றது. பாரிசான் நேசனல் கூட்டணிக்கு கிடைத்த வாக்குப்பதிவு 57.28%.[1][2]