மலாயா பல்கலைக்கழகம்
கோலாலம்பூரில் உள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
கோலாலம்பூரில் உள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
மலாயா பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Malaya; ஆங்கிலம்:University of Malaya; ஜாவி: ونيۏرسيتي ملايا சீனம்: 馬來亞大學) என்பது மலேசியாவின் மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். 1905-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் கோலாம்பூருக்கு அருகே லெம்பா பந்தாய் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகும்.
மலாயா பல்கலைக்கழகத்தின் நுழைவாசல் | |
முந்தைய பெயர் | மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி ராபிள்ஸ் கல்லூரி சிங்கப்பூரின் மலாயா பல்கலைக்கழகம் |
---|---|
குறிக்கோளுரை | அறிவுதான் முன்னேற்றத்தின் ஆதாரம் (Ilmu Puncha Kemajuan) (Knowledge is the Source of Progress) |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் (ஆய்வுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 28 செப்டம்பர் 1905[1][2] |
நிதிக் கொடை | MYR 633 மில்லியன். (2021)[3] (US $135 மில்லியன்) |
வேந்தர் | பேராக் சுல்தான் நசுரின் சா |
துணை வேந்தர் | பேராசிரியர் டத்தோ நூர் அசுவான் அபு ஒசுமான் |
மாணவர்கள் | 35,054 (2023)[4] |
பட்ட மாணவர்கள் | 20,181 (2023)[4] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 14,873 (2023)[4] |
அமைவிடம் | Universiti Malaya, 50603 , , 3°07′15″N 101°39′23″E |
நிறங்கள் | சிவப்பு, பொன், நீலம் |
சேர்ப்பு | பொ.ப.கூ, பசிபிக் விளிம்பு பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, தென்கிழக்காசிய உயர் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஆசியான் பல்கலைக்கழகப் பிணையம், இசுலாமிய உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[5] |
இணையதளம் | www |
மலாயா சுதந்திரம் அடைந்த போது மலாயாவில் இருந்த ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும்.[6] மலேசியாவின் ஐந்து பிரதமர்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், வணிகம் மற்றும் கலாசாரப் பிரமுகர்கள்; இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள்.[7]
இங்கு தமிழ் மொழிப் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மலாயா பல்கலைக்கழகத்தில் இரண்டு புலங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது. கல்வி புலத்தில், இந்திய ஆய்வியல் துறையின் கீழ் தமிழ்மொழி இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மொழியியல் புலத்தின் கீழ் இளங்கலை மொழியியல் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னோடிக் கல்லூரியான மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி, 28 செப்டம்பர் 1905 அன்று சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் ஒரு பிரதேசமாக இருந்தது. அக்டோபர் 1949-இல், மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரியும்; ராபிள்ஸ் கல்லூரியும் இணைக்கப்பட்டதும், புதிய பல்கலைக்கழகமாக மலாயா பல்கலைக்கழகம் உருவானது.
15 சனவரி 1959-இல் மலாயா பல்கலைக்கழகத்தின் இரண்டு தன்னாட்சி பிரிவுகள்; ஒன்று சிங்கப்பூரிலும் மற்றொன்று கோலாலம்பூரிலும் அமைக்கப்பட்டன. 1960-ஆம் ஆண்டில், இந்த இரண்டு பிரிவுகளும் தன்னாட்சி மற்றும் தனி தேசியப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் கருத்துரைத்தது.
அதன்படி ஒரு பிரிவு சிங்கப்பூரில் அமைக்கப்பட்டு, சிங்கப்பூர் பல்கலைக்கழகம் என பெயரைப் பெற்றது. பின்னர் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது. 1965-ஆம் ஆண்டில், மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு, மற்றொரு பலகலைக்கழகப் பிரிவு கோலாலம்பூரில் அமைக்கப்பட்டு, மலாயா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது.
1961-ஆம் ஆண்டு மலேசியச் சட்டத்தின் கீழ், 1962 சன்வரி 1-ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 2012-ஆம் ஆண்டில், மலேசிய உயர்க் கல்வி அமைச்சினால் மலாயா பல்கலைக்கழகத்திற்கு தன்னாளுமை தகுதி வழங்கப்பட்டது.[1][8][2]
தற்போது, மலாயா பல்கலைக்கழகம் 2,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்; விரிவுரையாளர்கள்; பேராசிரியர்கள் எனும் கல்வியாளர்களைக் கொண்டுள்ளது.[4] மேலும், இந்தப் பல்கலைக்கழகம் பதின்மூன்று துறைகள், இரண்டு கல்விக்கூடங்கள், ஐந்து கல்விக் கழகங்கள் மற்றும் ஆறு கல்வி மையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அண்மைய உலகப் பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலில், மலாயா பல்கலைக்கழகம் தற்போது உலகில் 65-ஆவது இடத்திலும், ஆசியாவில் 11-ஆவது இடத்திலும், தென்கிழக்கு ஆசியாவில் 3-ஆவது இடத்திலும் உள்ளது. அத்துடன் மலேசியாவில் மிக உயர்ந்த தரவரிசை கற்றல் நிறுவனமாகவும் உள்ளது..[9]
மலேசியாவின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய மாணவர்கள் பலரை மலாயா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. மேலும் அதன் பட்டதாரிகள் நாட்டின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். அரசியலில், மலாயா பல்கலைக்கழகம் அதிக எண்ணிக்கையிலான பிரதமர்களை உருவாக்கியுள்ளது.
மலேசியாவின் பத்து பிரதமர்களில் ஐவர், மலாயா பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள். மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பட்டதாரிகள் மக்களவை உறுப்பினர்களாகவும், மேலவை உறுப்பினர்களாகவும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சரவையின் அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும், ஆளுநர்களாகவும் மற்றும் மலேசிய மேலவை; மலேசிய மக்களவை; இரு அவைகளின் அவைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.[10]
குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகளில் மலேசிய மக்களவையின் தற்போதைய அவைத் தலைவர் ஜொகாரி அப்துல், மலேசிய மேலவையின் முன்னாள் அவைத் தலைவர் விக்னேஸ்வரன் சன்னாசி, முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் சைனுடின் போன்றவர்கள் முன்னாள் மாணவர்கள் ஆவார்கள்.[11] [12]
முன்னாள் மலாக்கா ஆளுநர்; மற்றும் பகாங் மாநிலத்தின் மந்திரி பெசார் முகமட் கலீல் யாக்கோப்; மற்றும் சுங்கை பூலோ மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினர் சிவராசா ராசையா போன்றோர் மலாயா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள்.[13][14]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.