மத்திய சுலாவெசி
இந்தோனேசிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
மத்திய சுலாவெசி (Central Sulawesi) சுலாவெசித் தீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஒரு மாகாணம் ஆகும். பலு நகரம் மத்திய சுலாவெசியின் தலைநகரமாகும். 2010 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,420 நபர்களாகும். சமீபத்திய 2014 ஆம் ஆண்டு சனவரி நிலவரப்படி இம்மக்கள்தொகை அளவு 28,39,290 நபர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் மத்திய சுலாவெசி Central Sulawesi Sulawesi Tengah, நாடு ...
மத்திய சுலாவெசி
Central Sulawesi Sulawesi Tengah | |
---|---|
இந்தோனேசியாவில் மத்திய சுலாவெசியின் அமைவிடம் | |
நாடு | இந்தோனேசியா |
தலைநகரம் | பலு |
பரப்பளவு | |
• மொத்தம் | 61,841.29 km2 (23,877.06 sq mi) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 28,39,290 |
• அடர்த்தி | 46/km2 (120/sq mi) |
நேர வலயம் | WITA (UTC+8) |
வாகனப் பதிவு | DN |
HDI | 0.664 (Medium) |
HDI rank | 25th (2014) |
மூடு
மத்திய சுலாவெசி 61,841.29 கிலோமீட்டர் 2 அல்லது 23,877 சதுரமைல்கள் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது[1].வடக்கில் கோரோண்டலோட்டோ மாகாணம், தெற்கில் மேற்கு சுலாவெசி, தெற்கு சுலாவெசி மற்றும் தென்கிழக்கு சுலாவெசி மாகாணங்களும், கிழக்கில் மலுக்குத் தீவுகளும் மேற்கில் மகாசார் நீரிணைப்பும் எல்லைகளாக உள்ளன.